ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசின் தலைவராகும் முல்லா முகமது ஹசன்! நடக்க போகும் மாற்றங்கள்
காபூல்: தாலிபன்கள் 'முல்லா முகமது ஹசன் அகுந்தை' ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய அரசின் தலைவராக (பிரதமர்) பரிந்துரைத்துள்ளனர். முல்லா பரதர் அகுந்த் மற்றும் முல்லா அப்துல் சலாம் ஆகியோர் துணை பிரதமர்களாக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தியில் கூறியுள்ளன.
Recommended Video
ஆகஸ்ட் 15ம் தேதி காபூலை கைப்பற்றிய தாலிபன்கள், ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடுவிதித்தனர். அதன்படியே அமெரிக்க படைகளும் வெளியேறிவிட்டன,
புதிய ஆட்சியை ஆப்கானிஸ்தானில் அமைப்பதற்கு தாலிபன்கள் தயாராகி வருகின்றனர். பல்வேறு குழுவினரிடம் நிர்வாக அமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பேசி வருகிறார்கள்.

அப்துல் கனி
இதனிடையே ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க தாலிபன்கள் தற்போது தயாராகிவிட்டனர். இதை அங்குள்ள ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. தாலிபன்கள் 'முல்லா முகமது ஹசன் அகுந்தை' ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய அரசின் தலைவராக (பிரதமர்) பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தாலிபன்களின் தலைவர் அப்துல் கனி அரசின் துணை தலைவராகவும் (துணை பிரதமர்) பொறுப்பேற்க உள்ளாராம்.

அமைச்சர்கள் யார் யார்
மேலும் முல்லா அப்துஸ் சலாம் இரண்டாவது துணை பிரதமர்களாக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சராக சிராஜூதின் ஹக்கானி, வெளியுறவு அமைச்சராக ஆமீர் கான் முத்தாகி. ஆப்கான் இடைக்கால அரசின் துணை வெளியுறவு அமைச்சராக ஷேர் முகமது அப்பாஸ் துணை வெளியுறவு அமைச்சர் ஷேர் முகமது அப்பாஸ் (இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்றவர்), ஆப்கான் இடைக்கால அரசின் பாதுகாப்பு அமைச்சராக முல்லா யாகூப் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு அமைகிறது
இதனிடையே தாலிபன்களின் செய்தி தொடர்பாளர் அஹமதுல்லா முட்டாக் கூறும் போது, இஸ்லாமிய அரசாங்கத்தின் பிரகடனத்திற்கான ஏற்பாடுகள் முடிந்துவிட்டன, கடவுளின் விருப்பதுடன் அரசாங்கம் விரைவில் அமைகிறது. 40 வருட ஆப்கானிஸ்தான் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் முழுவதையும் ஆட்சி செய்யும் ஒரே அரசு இதுதான்" என்று பெருமிதத்துடன் ட்விட்டரில் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
தாலிபன்கள் புதிய அரசின் பதவியேற்புக்கு பாகிஸ்தான், ரஷ்யா, துருக்கி, ஈரான் மற்றும் கத்தார் நாட்டு அரசு தலைவர்களை அழைத்துள்ளனர். இரண்டு முறை அரசு பதவியேற்பு குறித்த அறிவிப்பை ஒத்திவைத்தவர்கள் தற்போது முடிவு செய்துள்ளனர். அண்மையில் தாலிபன்கள் வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தான் உள்பட எந்த நாடும் ஆப்கானிஸ்தானின் உள்விவகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications