For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடப்பாவமே.. மனைவியால் உயிருக்கு ஆபத்து.. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கேட்கிறார் முகமது ஷமி

Google Oneindia Tamil News

கொல்கத்தா: இந்திய வேகப்பந்து வீச்சாளர், முகமது ஷமி, தனது மனைவியிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று, கேட்டுக்கொண்டுள்ளார்.

முகமது ஷமி மற்றும் அவர் மனைவி ஹசின் ஜஹான் நடுவே நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது.

பிற பெண்களுடன் முகமது ஷமி பேஸ்புக்கில் மோசமாக சாட் செய்ததாக ஹசின், தனது பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டு கடந்த மாரச் மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

கள்ளத் தொடர்பு

கள்ளத் தொடர்பு

முகமது ஷமிக்கு வேறு பெண்களுடன் கள்ள தொடர்புகள் இருப்பதாக, ஹசின் குற்றம்சாட்டி வந்தார். ஆனால் முகமது ஷமியோ தனது மனைவி மனநலம் சரியில்லை என்று கூறினார். இதற்கு ஹசின் பதிலடி கொடுத்தார். இப்படி, இருதரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகிறார்கள்.

மனைவி குற்றச்சாட்டு

மனைவி குற்றச்சாட்டு

முகமது ஷமி, மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக பகீர் குற்றச்சாட்டையும் அவர் மனைவி வெளியிட்டார். இதனால்தான் பிசிசிஐ முகமது ஷமிக்கான ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் பிசிசிஐ நடத்திய விசாரணையில், முகமது ஷமி மீது குற்றம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டது. பிறரகு புதிதாக ஒப்பந்தம் போடப்பட்டது.

துப்பாக்கி பாதுகாப்பு

துப்பாக்கி பாதுகாப்பு

இந்த நிலையில்தான், அம்ரோகா மாவட்ட நீதிபதியிடம், தனக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு தேவை என மனு கொடுத்துள்ளார். இதை விசாரித்த நீதிபதி ஹேமந்த் குமார், உரிய வகையில் மனுவை நிரப்பி கொடுக்கும்படி உத்தரவிட்டார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சுற்றுப் பயணம் செய்தபோது, முகமது ஷமி அதில் பங்கேற்றார். அதில் இந்தியா 4-1 என்று தோற்றாலும், முகமது ஷமி சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India fast bowler Mohammed Shami has reportedly asked for a gunner for his security as the dispute between him and his wife Hasin Jahan continues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X