கும்பமேளாவில் பேமஸான மோனாலிசாவுக்கு வைர நெக்லஸ் பரிசளித்த பிரபலம்! யாருனு பாருங்க
திருவனந்தபுரம்: கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்க வந்த மோனலிசா, சோஷியல் மீடியாவில் வேகமாக பேமஸ் ஆகியிருந்தார். இந்நிலையில், அவர் கேரளாவில் செம்மனூர் நகைக்கடையின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருக்கிறார். அவருக்கு நகை கடை அதிபர் பாபி செம்மனூர் வைர நெக்லஸை பரிசாக கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும் சோஷியல் மீடியாக்களில் வேகமாக ஷேராகி வருகிறது. மோனலிசா விரைவில் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கோழிக்கோட்டில் உள்ள செம்மனூர் நகைக்கடையில் இன்று நடைபெறும் விழாவில் மோனாலிசா பங்கேற்பார் என்று பாபி செம்மனூர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதேபோல இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மோனாலிசா பங்கேற்றிருக்கிறார். மோனாலிசா கேரளா வருவது இதுவே முதல்முறையாகும். அவரை அழைத்துவர ரூ.15 லட்சம் வரை செலவு செய்ததாக பாபி தெரிவித்திருக்கிறார். இளஞ்சிவப்பு நிற லெஹங்காவில், பாபியுடன் மோனாலிசா டான்ஸ் ஆட.. ரசிகர்கள் உற்சாக முழக்கமிட்டிருக்கின்றனர்.
மேடையில் "எல்லோரும் நல்லா இருக்கீங்களா" என்று மலையாளத்தில் பேச தொடங்கிய மோனாலிசா, என்னை எந்த அளவுக்கு மக்கள் போற்றுகிறார்களோ, அந்த அளவுக்கு நான் அவர்களின் ரசிகையாக இருப்பேன் என்று கூறி, அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டார். இவரை தொடர்ந்து பேசிய பாபி,
"கும்பமேளாவில் பேமஸான மோனாலிசா இங்கு வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் மலையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டிருக்கிறார். கும்பமேளாவின் வைரம் தற்போது பாபி செம்மனூர் குழுமத்தின் வைரமாக மாறியிருக்கிறது. நாங்கள் ஒன்றாக இணைந்து மீண்டும் கும்பமேளாவுக்கு போக இருக்கிறோம்" என்று பாபி கூறியுள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மோனாலிசாவுக்கு பாபி, வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சாதாரண எளிய குடும்பத்தை சேர்ந்த மோனாலிசா, கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்கும்போது அனைவராலும் கவனிக்கப்பட்டார். அவரது கண்கள் குறித்து பலரும் புகழ்ந்து பேசினார்கள். மோனி போஸ்லே என்கிற இயற்பெயற்கொண்ட இவர், இன்ஸ்டா பேமஸான பிறகு, பரவலாக மோனாலிசா என்று அழைக்கப்பட்டார்.
கும்பமேளாவில் இவர் தொடக்கத்தில் பெரும் கவனம் பெற்றாலும், அதன் பின்னர் தொடர்ந்து சிக்கல்களுக்கும் உள்ளானார். வலுக்கட்டாயமாக தன்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பலரும் இவரை வற்புறுத்த தொடங்கினர். இதனால் இவரது வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இவர் தங்கியிருந்த கூடாரத்திற்குள் புகுந்த சில இளைஞர்கள் வற்புறுத்தி செல்ஃபி எடுத்திருக்கின்றனர். இதனை தட்டிக்கேட்ட இவரது சகோதரரும் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார். இதெல்லாம் கும்பமேளாவில் நடந்த மோசமான சம்பவங்கள்.
இருப்பினும், இவரை சினிமாவில் நடிக்க வைப்பதாக இயக்குநர் ஒருவர் பொதுவெளியில் அறிவித்தார். அதேநேரம், இவரை கேரளாவுக்கு அழைத்து வந்து நகைக்கடை விழாவில் பங்கேற்க வைத்திருப்பது, இவருக்களுக்கான ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரிக்க செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications