தென்மேற்கு பருவமழை... ஒடிஷா, மேற்கு வங்க மாநிலங்களிலும் மழைப் பொழிவு
டெல்லி: தென்மேற்கு பருவமழை காரணமாக ஒடிஷா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி படிப்படியாக மற்ற மாநிலங்களுக்கும் மழை பொழிவை கொடுத்து வருகிறது. அதன்படி ஒடிஷா, மேற்கு வங்கம் அஸ்ஸாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை பொழிவு தொடங்கியுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. ஒடிஷா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. நேற்றுவரையில், பாலசோர், ஜெய்ப்பூர், பாட்ராக், பூரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனழை பொழிந்துள்ளது.
ஒடிஷாவில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களிலும் ஓரிரு நாட்களில் மழை பொழிவு தொடங்கும். மாநிலத்தின் மத்திய பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இது அடுத்த 5 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடும்படியாக பவானிபாட்னா பகுதியில் 50 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
இதேபோல, மேற்கு வங்கத்திலும் அதிக மழை பொழிந்துள்ளது. அதிகபட்சமாக பான்குரா குதியில் 45.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பின்வரும் நாட்களில் பான்குரா மற்றும் பர்டுவான் பகுதியில் அதிக மழை பொழிய வாய்ப்புள்ளது. மேலும் கொல்கத்தா, மேற்கு வங்க கங்கை பகுதி ஆகிய பகுதிகளில் இன்னும் சில நாட்களில் மழைப் பொழிவு தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications