ரூ.9,000 எல்லாம் ஒரு சம்பளமா? உழைப்பு சுரண்டல்.. மறுபரிசீலனை செய்ய ஒடிசா அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை
புவனேஷ்வர்: ஊர்காவல் படையினருக்கு மாதம் ரூ.9,000 ஊதியம் வழங்குவது உழைப்புச் சுரண்டல் என்றும், இந்த ஊதியத்தை ஒடிசா மாநில அரசு மறுபரிசீலனை செய்திட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் ஊர்காவல் படை வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறைவாக உள்ளதாக ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இதனை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம், ஒருநாளைக்கு ரூ.533-ஐ ஊதியமாக வழங்குமாறு அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஒடிசா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நாகரத்னா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஒடிசா மாநிலத்தில் காவலர்களுக்கு மாதம் ரூ.9,000 மட்டும் ஊதியமாக வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இருவேறு ஊதியம்
ஒடிசா மாநிலத்தில் காவல்துறையில் பணிபுரிபவர்கள், மாதம் சுமார் ரூ.21,700-ஐ ஊதியமாக பெறுகிறார்கள். ஏழாவது ஊதியக் குழு பிரிந்துரையின் அடிப்படையில் அகவிலைப்படியும் அவர்களுக்கு கிடைக்கிறது. அதே நேரம் 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊர்காவல் படை வீரர்களுக்கு ரூ.9,000 மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.

இதெல்லாம் ஒரு சம்பளமா?
இதனை கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம், "மாதம் வெறும் ரூ.9,000 ஊதியம் கொடுப்பது அப்பட்டமான உழைப்பு சுரண்டல் என்பதைத் தவிர வேறில்லை. வெறும், ரூ.9,000 ஐ வைத்துக் கொண்டு தங்கள் குடும்பத்தினரை ஊர்காவல் படையினர் எப்படி சமாளிப்பார்கள்? காவல்துறையில் உள்ள காவலர்கள் செய்யும் அதே வேலையைதானே ஊர் காவல் படையினரும் செய்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் உத்தரவு
மிகவும் குறைந்த சம்பளத்தை பெற்றுக்கொண்டு இவர்களால் எப்படி உயிர் பிழைக்கு இயலும். ஊர்காவல் படையினருக்கு மாதம் ரு.9,000 ஊதியம் வழங்குவதை மறுபரிசீலனை செய்திடுமாறு ஒடிசா மாநில அரசுக்கு உத்தரவிடுகிறோம்." என நீதிபதிகள் தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஒடிசா மாநில ஊர்காவல் படையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications