இந்த கொசுத் தொல்லை தாங்கலை சார்: ராஜ்யசபா உறுப்பினர்கள் புகார்
டெல்லி: நாடாளுமன்றத்தில் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை என்று ராஜ்யசபா உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் அதுவும் மாலை நேரத்தில் கொசுக்களின் தொல்லை அதிகம் உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நடந்த பொது பட்ஜெட் மீதான விவாதத்தில் ராஜ்யசபா உறுப்பினரும், பாலிவுட் நடிகையுமான ஜெயா பச்சன் கலந்து கொண்டார்.
விவாதத்தின் இடையே அவர் சபாநாயகரிடம் புகார் ஒன்றை தெரிவித்தார்.

ஜெயா பச்சன்
சார், ஒரு புகார் தெரிவிக்க விரும்புகிறேன். மாலை 6 மணிக்கு மேல் நாடாளுமன்ற அவைகளில் கொசுத் தொல்லையை தாங்க முடியவில்லை. அதனால் புகை போடச் சொல்லுங்கள் என்று ஜெயா பச்சன் தெரிவித்தார்.

கொசு
நல்ல ஆலோசனை. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவையின் துணை சபாநாயகர் பி.ஜே. குரியன் ஜெயா பச்சனிடம் கூறினார்.

நஜ்மா ஹெப்துல்லா
கொசு எங்களை கடிப்பதால் வலிக்கிறது சார். நாங்கள் எல்லாம் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளோம். ஆனால் கொசுக்கள் நினைத்த நேரம் வந்துவிடுகிறது. அவை உறுப்பினர்களை கொசுக்களிடம் இருந்து காப்பது உங்களின் பொறுப்பு என்று சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா காமெடியாக பேசினார்.

ரவிசங்கர் பிரசாத்
நீங்கள் தான் அவையின் பாதுகாவலர். அதனால் நீங்கள் தான் எங்களை கொசுக்களிடம் இருந்தும் பாதுகாக்க வேண்டும் என தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கோரிக்கை விடுத்தார்.
-
3.2 கோடி கொசுக்களை ஊருக்குள் விடப் போகும் கூகுள்! பின்னணியில் மெகா ஸ்கெட்ச்! அமெரிக்கா அனுமதிக்குமா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications