பட்.. அந்த நேர்மை ரொம்பப் பிடிச்சிருக்கு... அதிகம் விரும்பப்படும் கோஹ்லி.. 10வது இடத்தில் டோணி!
டெல்லி: இந்தியாவில் மிகவும் விரும்பப்படுவோர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி. இந்தியா டைம்ஸ் இணையதளம் 50 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு, அதில், அதிகம் விரும்பப்படும் நபர் யார்? ( most desirable person) இணையம் மூலம் வாக்கெடுப்பு நடத்தியது.
கோஹ்லிக்கு ஏராளமானோர் வாக்களித்து முதலிடம் அளித்துள்ளனர். இதற்கு காரணம் அவரது செயல்பாடுகள்தான். செய்யப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் டோணி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா ஆகியோர் விராட் கோஹ்லிக்கு பிறகே இடம் பிடித்துள்ளனர். இந்தியா முழுவதும் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் சூர்யா, தனுஷ், அஜீத்தும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

கோஹ்லிக்கு முதலிடம்
இந்திய அணியின் துணைக் கேப்டன் விராட்கோஹ்லி, 20 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார். களத்தில் ஆவேசமாக செயல்படுவது, கிரிக்கெட் திறமை, நேர்மையான நடத்தை ஆகியவற்றால் இந்தியாவில் அதிக மக்கள் நேசிக்கும் மனிதராக விராட் கோஹ்லியை முதலிடத்திற்கு உயர்த்தியுள்ளது.

நேர்மையான வாழ்க்கை
அதிகம் விரும்பப்படும் என்ற கேள்வியுடன் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளபோதிலும், கோஹ்லியின் நேர்மைக்காகவே அவரை விரும்புவதாக அதிகம்பேர் தெரிவித்துள்ளனர்.

உண்மையை மறைப்பதில்லை
இது குறித்து மகிழ்ச்சியோடு கருத்து கூறியுள்ள, விராட் கோஹ்லி கூறுகையில்,'' உண்மையை மறைத்து நான் பேசுவதில்லை. என்னால் முடிந்தவரை நேர்மையான வாழ்க்கையை நான் வாழ்கிறேன்'' என்றார்.

அனுஷ்காவின் எளிமை
காதலி அனுஷ்கா சர்மாவிடம் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? என்று கேட்ட போது, ''அனுஷ்காவும் என்னைப் போல நேர்மையானவர். அதோடு மிகவும் எளிமையானவர். அந்த குணமே எனக்கு அவரிடம் பிடித்தது'' என்று பதிலளித்துள்ளார்.

ஹிருத்திக் ரோஷன்
அதிகம் விரும்பப்படும் நபர் என்ற பட்டியலில் இரண்டாவது இடத்தை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் பிடித்துள்ளார்.

மகேஷ்பாபு
இந்தப்பட்டியலில் தென்னிந்திய நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளனர். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு இந்தப் பட்டியலில் 6வது இடம் பிடித்துள்ளார்.

டோணிக்கு 10வது இடம்
இந்திய கிரிக்கெட் கேப்டன் டோணிக்கு இந்தப் பட்டியலில் 10வது இடம் கிடைத்துள்ளது.

சூர்யா - தனுஷ்
இந்தப்பட்டியலில் 15 வது இடத்தை நடிகர் சூர்யாவும், 16 வது இடத்தை நடிகர் தனுஷும் பெற்றுள்ளனர்.

சுதீப் - அஜீத்
மிகவும் விரும்பத்தக்க நபர்கள் பட்டியலில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் 47வது இடத்தையும் 48 வது இடத்தை அல்டிமேட் ஸ்டார் அஜித்தும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications