மத்திய பிரதேசத்தில் விஸ்வரூபம்... ஆக்சிஜன் இல்லை என பேனர் கட்டி தொங்கவிட்ட மருத்துவமனைகள்!
போபால்: மத்திய பிரதேச மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லை என மருத்துவமனைகள் பேனர்களை கட்டி அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் கொள்ளையடிக்கப்படுவதாக மாநிலங்களிடையே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அரவிந்த் மருத்துவமனை, ஆக்சிஜன் இல்லை என பேனர் வைத்துள்ளது. இதேபோல் பல தனியார் மருத்துவமனைகளும் போதுமான ஆக்சிஜன் இல்லை என அறிவித்திருப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கி உள்ளது.
இது தொடர்பாக ஹிதேஷ் சர்மா என்ற மருத்துவர் கூறுகையில், எங்கள் மருத்துவமனையில் 32 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. மாநில அரசு உடனடியாக ஆக்சிஜன்களை விநியோகிக்க வேண்டும் என்றார்.

இதனிடையே மத்திய பிரதேசத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்ட நோயாளியின் உறவினர் ஒருவரை 2 அறைவிடுவேன் என மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் எச்சரிப்பதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக பிரகலாத் படேல் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
அதில், முழு வீடியோவையும் வெளியிடாமல் வெட்டி ஒட்டி வெளியிடப்பட்டுள்ளது. நோயாளியின் ஒருவர் அவதூறாக பேசியதால்தான் 2 அறை விடுவேன் என எச்சரிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் முழு வீடியோவையும் அமைச்சர் பிரகலாத் படேல் தரப்பு வெளியிட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications