பொதுச் செயலாளராக சசிகலா நியமனத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்தில் மைத்ரேயன் மனு
தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை மைத்ரேயன் எம்பி இன்று சந்தித்தார். அப்போது, சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என அறிவிக்க கோரி மனு அளித்துள்ளனர்.
டெல்லி: ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்கள் ராஜ்ய சபா எம்பி மைத்ரேயன் தலைமையின் டெல்லி சென்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.
ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் உறுப்பினராக தொடர்ந்து 5 ஆண்டுகள் இல்லாத சசிகலாவை பொதுச் செயலாளராக நியமிக்க சட்டத்தில் இடம் இல்லை என்று சசிகலா புஷ்பா எதிர்ப்பு தெரிவித்தார்.

அதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றையும் சசிகலா புஷ்பா அளித்துள்ளார். இதனையடுத்து தேர்தல் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை சசிகலாவிற்கு அனுப்பி இருந்தது. இந்த நோட்டீசுக்கு இதுவரை அதிமுகவில் இருந்து எந்த பதிலும் இல்லை.
இந்நிலையில், இன்று ஓபிஎஸ் அணியில் மைத்ரேயன் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்தார். அவருடன் பி.எச். பாண்டியன், வழக்கறிஞர் ரவீந்தரனும் சென்றனர். அப்போது, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி மனு அளித்துள்ளனர்.
மேலும், தண்டனை பெற்ற சசிகலாவை பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்றும் துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டதும் செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications