எம்.பிக்கள் சம்பளம் இரு மடங்காக உயர்கிறது!
டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தை இரட்டிப்பாக்க நாடாளுமன்ற விவகாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் எம்.பிக்கள் செயல்பாடு ஆக்கப்பூர்வமாக இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ள நிலையிலும், சம்பள உயர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது எம்.பிக்களின் மாத சம்பளம் ரூ.50 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதை ரூ.1 லட்சமாக உயர்த்தவும், தொகுதி அலோவன்ஸ் தொகையை ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.90 ஆயிரமாக உயர்த்தவும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் நிதித்துறைக்கு சிபாரிசு செய்துள்ளது. இதை நிதித்துறை ஏற்றுக்கொண்டுள்ளது.

பெரும்பாலான எம்.பிக்கள் தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டாம் என்று விரும்புகிறார்களாம். ஏனெனில், சம்பளத்தில் உயர்வு ஏற்பட்டால் உயர் வருமான வரி பிரிவில் தாங்கள் சேர வேண்டிவரும், வரி மூலம் அரசுக்கு அதிக பணம் சென்றுவிடும் என்பதால், அலோவன்ஸ் தொகையை உயர்த்தி கேட்கிறார்களாம்.
வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, இந்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. கடைசியாக 2010ம் ஆண்டில் சம்பளம் உயர்த்தப்பட்டிருந்தது.
லோக்சபா அல்லது ராஜ்யசபாவை நடத்த ஒரு நிமிடத்திற்கு ரூ.29 ஆயிரம் செலவாகிறது. ராஜ்யசபாவில் விரையமாக்கப்பட்ட நேரத்தால், சுமார் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையிலும், சம்பள உயர்வுக்கு அனைத்து எம்.பிக்களும் கட்சி வேற்றுமையின்றி முயற்சி நடத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications