மும்பையில் கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்க வைத்து கடலுக்குள் தள்ளிவிட்ட வாலிபர்
மும்பை: மும்பை கோரா கடற்கரையில் 18 வயது கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து வந்தவர் அவரை கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்க வைத்து கடலுக்குள் தள்ளிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாஹிசார் பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவியை அப்பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திரா(20) என்பவர் கடந்த பல மாதங்களாக பின் தொடர்ந்து வந்துள்ளார்.

இதையடுத்து அப்பெண்ணின் குடும்பத்தார் ஜிதேந்திரா மீது போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் அவரை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று இரவு ஜிதேந்திரா அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்க வைத்து அவரை கோராய் கடற்கரையில் கடலுக்குள் தள்ளிவிட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அப்பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதற்கிடையே போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து ஜிதேந்திராவை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications