விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி... பயணிக்கு உடல்நிலை பாதிப்பு
மும்பை: ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. அந்த உணவை சாப்பிட்ட பயணி தனக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.
பிர்ஜு சல்லா(35) என்ற தொழில் அதிபர் நேற்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் உயர்வகுப்பில் மும்பையில் இருந்து ராஜ்கோட் சென்றுள்ளார். விமானத்தில் அவருக்கு காலை உணவாக புரோட்டா, பழங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அவற்றுடன் வழங்கப்பட்ட சன்னா மசாலாவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. ஆனால் கரப்பான் பூச்சி இருந்தது தெரியாமல் அந்த உணவை சாப்பிட்டதால் அவருக்கு விமானத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அவர் விமான பணியாளர்களிடம் கூறிய போது அவர்கள், மற்றொரு பிளேட் உணவு வழங்குவதாக கூறியுள்ளனர். ஆனால், பிர்ஜு சல்லாவுக்கு எந்த மருத்துவ உதவியும் அளிக்கவில்லை.
இது குறித்து இமெயில் மூலம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திகு அவர் புகார் அளித்துள்ளார். பிர்ஜு சல்லாவின் புகார் பற்றி விளக்கம் அளித்துள்ள ஜெட் ஏர்வேஸ் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பயணிக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications