லிவிங் டுகெதர் பார்ட்னரை கொன்ற 56 வயது நபர்.. துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த கொடூரம்
மும்பை: மும்பையில் திருமணமாகாமல் ஒரே வீட்டில் வசித்து வந்த காதலியை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மீரா சாலையை சேர்ந்தவர் மனோஜ் சஹானி (56). இவருடன் சரஸ்வதி வைத்யா (36) எனும் பெண் திருமணமாகாமல் ஒரே வீட்டில் தங்கியுள்ளார். மனோஜ் போலிவாலியில் ஒரு கடையை நடத்தி வருகிறார்.

இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரு மூன்று தினங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஒரு தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறில் ஆத்திரமடைந்த மனோஜ், சரஸ்வதியை கொன்றுவிட்டார். இதையடுத்து அந்த பெண்ணின் உடலை மரம் அறுக்கும் இயந்திரத்தால் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பிறகு அந்த துண்டுகளை குக்கரில் போட்டு வேக வைத்துள்ளார். எனினும் அவரது வீட்டில் இருந்து சுற்றியிருந்தவர்களுக்கு அழுகிய நாற்றம் வந்தது.
மேலும் அந்த வீட்டில் இருந்து மனோஜ் மட்டுமே வெளியே சென்று வருவதையும் சரஸ்வதி வெளியே வராததையும் குடியிருப்புவாசிகள் கவனித்துள்ளனர். இதையடுத்து நாளுக்கு நாள் அழுகிய நாற்றம் அதிகரித்து வந்ததை அடுத்து அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர்.
அப்போது கதவை திறந்ததும் நாற்றம் அடித்தது. அங்கு ஏதோ கொலை நடந்து அதன் தடயங்களை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மனோஜை கைது செய்துள்ளனர். அது போல் அவருடன் மற்றொரு நபரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு மே மாதம் தலைநகர் டெல்லியில் இது போன்றதொரு கோர சம்பவம் நடந்தது. அர்னாப் புனாவாலா என்பவர் தன்னுடன் லிவிங் டுகெதராக வசித்து வந்த ஷ்ரத்தா வாக்கர் என்பவரை திருமணம் செய்து கொள்ள நச்சரித்ததால் ஆத்திரத்தில் கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்திருந்தார்.
எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷ்ரத்தா வாக்கரை காணவில்லை என்பதால் அவருடைய தோழிகள் போலீஸில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து அர்னாப் கைது செய்யப்பட்டார். கடந்த 24 ஆம் தேதி 6,629 பக்கம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல் -
ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. நகைகளுடன் 2 பேர் கைது! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications