ஆந்திராவை உலுக்கிய கொலை.. மகனை கொன்று 5 துண்டுகளாக வெட்டி.. ஏரியில் வீசிய கொடூர தாய்.. நடந்தது என்ன?
அமராவதி: ஆந்திர மாநிலம் அருகே பெற்ற மகனை தாயே வெட்டிக் கொன்று உடலை 5 துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவான தாயை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாட்டில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், போதைப் பொருள்கள் புழக்கம், மதுப்பழக்கம், கொலை, கொள்ளை போன்ற பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

குறிப்பாக இளைஞர்கள் பலர் போதைப் பொருள், மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்பட்டு வந்தாலும் குறைந்தபாடில்லை. இந்நிலையில், ஆந்திர மாநிலம் அருகே தனது மகனின் ஒழுங்கீன செயல்பாடுகளைத் தாங்க முடியாமல் பெற்ற மகனை தாயே வெட்டிக் கொன்று உடலை 5 துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவான தாயை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கம்பம் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி தேவி. 57 வயதான லட்சுமிக்கு ஷியாம் பிரசாத் என்ற 35 வயது நிரம்பிய மகன் ஒருவர் உள்ளார். ஷியாம் பிரசாந்த் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், ஷியாம் மிகவும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவருடைய தாய் மிகவும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார்.
ஹைதராபாத், நரசரபேட்டை, பெங்களூரு பகுதியில் உள்ள தன்னுடைய சித்தி, பெரியம்மா, அத்தை என பல்வேறு உறவினர்களிடம் ஷியாம் பிரசாந்த் மிகவும் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய் லட்சுமிதேவி, தன்னுடைய உறவினர்களுடன் சேர்ந்து ஷியாமை கொலை செய்யத் திட்டம் போட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, லட்சுமி தேவி தனது மகனை நேற்று முன்தினம் இரவு கோடாரியால் வெட்டி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். பின்னர், தனது உறவினர்களுடன் சேர்ந்து ஷியாமின் உடலை ஐந்து துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டை கொண்டு கட்டியுள்ளார். பின்னர், அந்த உடலின் பாகங்களை கிராமத்தின் அருகில் உள்ள ஏரியில் வீசியுள்ளார்.
பெற்ற மகனைக் கொன்றுவிட்டு லட்சுமி தேவி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஷியாமின் உடல் ஏரியில் இருந்து கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவான லட்சுமி தேவியை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications