இஸ்லாமிய ஆண் - இந்து பெண் திருமணம் முஸ்லிம் சட்டத்தின் கீழ் செல்லாது.. மத்திய பிரதேச நீதிமன்றம்
இம்பால்: இஸ்லாமிய ஆணுக்கும் இந்து பெண்ணுக்கும் இடையே சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் நடைபெற்று இருந்தாலும், இஸ்லாமிய சட்டத்தின் கீழ் அந்த திருமணம் செல்லாது என்று மத்திய பிரதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய இளைஞர் ஒருவரும் இந்து பெண் ஒருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதம் மாறி செய்யும் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டால் சமுதாயத்தில் புறக்கணிப்படுவோம் என்ற அச்சத்தில் பெண் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

மேலும், வீட்டில் இருந்தது நகை பணம் உள்ளிட்டவரையும் எடுத்து சென்றதாக பெண் வீட்டில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொண்ட பின்னர் திருமண பதிவு அதிகாரி முன்பு ஆஜராகும் போது தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனுவை தள்ளுபடி செய்தது மத்திய பிரதேச நீதிமன்றம். மேலும் மனு மீதான விசாரரணையின் போது நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா சில கருத்துக்களை கூறினார். நீதிபதி கூறுகையில், "சிறப்பு திருமண சடடத்தின் கீழ் அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் கூட, முஸ்லீம் சட்டத்தின் கீழ் வழக்கத்திற்கு மாறான திருமணமாகவே இது கருதப்படும்" என்று கூறினார்.
மேலும் நீதிபதி கூறுகையில், 'இஸ்லாமிய சட்டத்தின் படி, இஸ்லாமிய நபரும் நெருப்பை வழிபடும் பெண்ணுக்கும் இடையே நடைபெற்ற திருமணம் செல்லாது என்றும் அது கறை படிந்த திருமணமாக இருக்கும் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
