முசாபர்நகரில் மேலும் ஒரு பயங்கரம்... முகாமில் இருந்த பெண் பலாத்காரம்
முசாபர்நகர்: உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் நிகழ்த்தப்பட்ட பயங்கர வன்முறை மற்றும் கொலை வெறித் தாக்குதலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ள முஸ்லீம்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஒரு முகாமில் தங்கியிருந்த 20 வயதுப் பெண்ணை இரண்டு நபர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த இருவரையும் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
2 மாதங்களுக்கு முன்பு முசாப்நகரில் பெரும் மதக் கலவரம் வெடித்தது. ஜாட் இனத்தவர்கள் ஒன்று திரண்டு, முஸ்லீம்களை குடும்பம் குடும்பமாக தாக்கினர். பலர் இதில் பலியானார்கள். பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
வீடுகளை இழந்து கிட்டத்தட்ட 40,000 பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த நிலையில், ஜோக்யா கேரி என்ற கிராமத்தில் உள்ள ஒரு முகாமில் தங்கியிருந்த 20 வயதுப் பெண் தனது எட்டு வயது தங்கையுடன் இலை தழை பொறுக்குவதற்காக முகாமை விட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது புகானா கிராமத்தைச் சேர்ந்த சுனில் மற்றும் சச்சின் ஆகிய இரு இளைஞர்களும் அந்த 20 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர்.
அருகில் உள்ள கரும்புக் காட்டுக்குள் இழுத்துச் சென்று அப்பெண்ணை இருவரும் சீரழித்துள்ளனர். பின்னர் இருவரும் ஓடி விட்டனர். ரத்தக் காயத்துடன் அப்பெண் தனது தங்கையுடன் சாலையில் விழுந்து கிடந்து கதறித் துடித்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸுக்குப் புகார் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர்.
இந்த நிலையில் கிராம மக்கள் ஒன்று திரண்டு அந்த இரு இளைஞர்களையும் தேடிப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் முசாபர்நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications