For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக எம்.எல்.ஏவை வாயை மூடச் சொன்ன அமைச்சரால் உ.பி. சட்டசபையில் களேபரம்

By Mathi
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ ஒருவரை 'வாயை மூடு" என்று அமைச்சர் அம்பிகா செளத்ரி கூறியதால் ஒரே களேபரமானது.

உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். 40 ஆயிரம் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். இந்த மோதல் தொடர்பாக 16 அரசியல்வாதிகளுக்கு கைது வாரண்ட்டும் பிறபிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்து வருகிறது. இந்த விவகாரம் உத்தரப்பிரதேச சட்டசபையிலும் எதிரொலித்தது.

அப்போது அமைச்சர் அம்பிகா செளத்ரிக்கும் பாஜகவின் எம்.எல்.ஏ. உபேந்திர திவாரிக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் போது உபேந்திர திவாரியை அமைச்சர் அம்பிகா செளத்ரி 'வாயை மூடு' என்று கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த அனைத்து பாஜக எம்.எல்.ஏக்களும் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து சபாநாயகர் இருக்கை முன்பாக ஒன்று கூடி அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அப்போது அமைச்சர்கள் பவான் பாண்டே, வினோத்சிங் ஆகியோருக்கும் 2 பாஜக எம்.எல்.ஏக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் சட்டசபை ஒரே களேபரமாக காட்சி அளித்தது.

English summary
A political squabble over the Muzaffarnagar communal clashes, which left nearly 50 dead and 40,000 in relief camps, had legislators coming to blows in the Uttar Pradesh assembly today after a state minister asked an MLA to "shut up"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X