அண்ணாமலை பற்ற வைத்த தீ.. நாகாலாந்தில் பற்றி எரியுதே.. ’நாய் கறி’ பேச்சு இப்படி வெடிச்சுருக்கே!
கோஹிமா: நாகாலாந்து மக்களின் நாய்கறி உணவு பழக்கத்தை விமர்சித்ததாக மூத்த திமுக தலைவர் ஆர்.எஸ். பாரதிக்கு நாகாலாந்து சுற்றுலாத்துறை அமைச்சர் தெம்ஜென் இம்னா அலாங் (Temjen Imna Along) கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னர் நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்தார். அப்போது நாகாலாந்து ஆயுத குழுக்களுடனான பேச்சுவார்த்தை விவகாரத்தில் கடும் அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டது. பின்னர் நாகாலாந்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆளுநராக ஆர்.என்.ரவி மாற்றப்பட்டார். அப்போது நாகாலாந்து மக்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நாகாலாந்து போல.. : இதனை சுட்டிக்காட்டும் வகையில், நாய்கறி சாப்பிடும் நாகாலாந்துகாரர்களுக்கு சொரணை வந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை ஓட ஓட விரட்டி அடித்தனர். சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் தமிழனகுக்கு எந்த அளவுக்கு சொரணை இருக்கும் என விமர்சித்திருந்தார் மூத்த திமுக தலைவர் ஆர்.எஸ். பாரதி.
ஆளுநர் ரவி, அண்ணாமலை: இதற்கு உடனடியாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் கண்டனம் தெரிவித்தார். நாய்கறி சாப்பிடும் நாகா இன மக்களை ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்திவிட்டதாக கொந்தளித்திருந்தார் ஆர்.என்.ரவி. இதேபோல தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் ஆர்.எஸ்.பாரதி பேசிய பேச்சை தமது எக்ஸ் பக்கத்தில் இந்தி சப் டைட்டிலுடன் பதிவிட்டிருந்தார்.
माननीय Thiru RS Bharathi जी,
— Temjen Imna Along (@AlongImna) November 6, 2023
ये बड़े दुःख की बात है की आपके नाम में ही 'Bharat' होने के बावजूद आपने एक समुदाय का अपमान और ठेंस पहुंचाने की कोशिश की जिस पर पूरे भारत 🇮🇳 को गर्व है।
INDI Alliance वालों, जरा अपने शब्दों पर काबू रखो।।
आओ कभी North-East पे to know us and our… https://t.co/uYr3JMs5Ll pic.twitter.com/vkY3ppbNaG
ஆர்.எஸ்.பாரதி விளக்கம்: ஆனால் "நாகாலாந்து மக்களை நான் இழிவுபடுத்தியதாக ஆளுநர் மாளிகை கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி. நாகாலாந்து மக்கள் நாய்கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதனை குவஹாத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்துள்ளது எனவும் ஆர்.எஸ். பாரதி விளக்கம் தந்திருந்தார்.
நாகாலாந்து அமைச்சர் கண்டனம்: இதனிடையே அண்ணாமலையின் எக்ஸ் பதிவில் பதிலளித்துள்ள நாகாலாந்து சுற்றுலா, கல்வித்துறை அமைச்சர் தெம்ஜென் இம்னா அலாங் கூறியிருப்பதாவது: உங்களால் இந்தியில் படிக்க முடியாது என்பதற்காக இந்தியில் எழுதியிருப்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தருகிறேன். பெயரில் பாரத் என வைத்து கொண்டு இந்த பாரதமே பெருமைப்படும் ஒரு சமூகத்தை அவமதித்துள்ளீர்கள். எங்களுடைய உணர்வுகளை காயப்படுத்தக் கூடாது. ஒட்டுமொத்த வடகிழக்கு மாநில மக்களும் ஒருங்கிணைந்து நமது பண்பாடு, வாழ்வுரிமை குறித்து அவர்களுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும். இவ்வாறு நாகாலாந்து அமைச்சர் தெம்ஜென் இம்னா அலாங் பதிவிட்டுள்ளார். இதேபோல நாகலாந்து மற்றும் வடகிழக்கு மாநில ஊடகங்களும் ஆர்.எஸ்.பாரதி பேச்சு,விளக்கம் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டும் வருகின்றன.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications