Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆந்திரா செல்லும் பாக்ஸ்கான்! அமைகிறது மெகா உற்பத்தி நகரம்! சலுகைகளை அள்ளி தரும் சந்திரபாபு நாயுடு

Subscribe to Oneindia Tamil

அமாராவதி: ஐபோன்களை உற்பத்தி செய்யும் பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் புதிய முதலீடுகளைச் செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கிடையே பாக்ஸ்கான் நிறுவனம் ஒரு மெகா உற்பத்தி ஆலையை அமைக்க முடிவு செய்துள்ள நிலையில், அதை ஆந்திராவில் அமைக்க வேண்டும் என்று அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக அவர் பாக்ஸ்கான் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் எப்போதும் தனது ஐபோன்கள் உற்பத்தியை மற்ற நிறுவனங்களுக்கு கன்டிராக்ட் கொடுத்தே உற்பத்தி செய்யும். அதன்படி ஐபோன்களை அசெம்பிள் செய்யும் முக்கிய நிறுவனம் தான் ஃபாக்ஸ்கான்.

Andhra Pradesh foxconn Chandrababu naidu

இந்த பாக்ஸ்கான் முதலில் சீனாவில் தான் தனது பிரதான தொழிற்சாலைகளைக் கொண்டிருந்தன. இருப்பினும், கொரோனா காலத்தில் சீனாவில் இருந்த கடுமையான கட்டுப்பாடுகளால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இந்தியாவில் முதலீடு: மீண்டும் இதுபோன்ற சூழல் ஏற்படாமல் இருக்கச் சீனாவுக்கு வெளியே உற்பத்தியை அதிகரிக்க இந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் ஏற்கனவே இந்த நிறுவனம் அதிக முதலீடுகளைச் செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் 2 ஆலைகள் செயல்பட்டு வருகிறது.

நாரா லோகேஷ்: நமது நாட்டில் கூடுதலாக ஆலைகளைத் திறக்க பாக்ஸ்கான் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே ஆந்திரப் பிரதேச ஐடி மற்றும் எலக்டிரானிக்ஸ் துறை அமைச்சர் நாரா லோகேஷ் இன்று பாக்ஸ்கான் குழுமத்தின் நிர்வாகிகளைச் சந்தித்துள்ளார். தங்கள் மாநிலத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் இந்த மெகா உற்பத்தி நகரத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக பாக்ஸ்கான் நிறுவனத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் உண்டவல்லியில் நாரா லோகேஷ் இல்லம் அமைந்துள்ள நிலையில், அங்கு தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. மாநிலத்தில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பாக்ஸ்கான் நிறுவனம் ஒரு பெரிய உற்பத்தி நகரத்தை உருவாக்க அனைத்து வசதிகளையும் செய்து தர ஆந்திர அரசு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மெகா உற்பத்தி நகரம்: இது குறித்து பாக்ஸ்கான் பிரதிநிதிகளிடம் நாரா லோகேஷ் மேலும் கூறுகையில், "இந்தியாவில் நீங்கள் உங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தத் திட்டமிட்டுள்ளீர்கள். ஆந்திராவில் சிறிய உற்பத்தி மையத்திற்குப் பதிலாக ஒரு மெகா உற்பத்தி நகரத்தை உருவாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம்" என்று அவர் கூறியிருக்கிறார்.

ஆந்திர இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதே தங்கள் அரசின் இலக்கு என்றும் இதில் பாக்ஸ்கான் முக்கிய பங்கு வகிக்கும் என்று நாரா லோகேஷ் நம்பிக்கை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "இந்த பெரிய உற்பத்தி நகரத்தை நிறுவுவதற்கு உங்களுக்கு என்னென்ன உதவிகள் தேவையோ, அதை நானே தனிப்பட்ட முறையில் செய்து தருவேன். இதற்காக ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்குவோம்" என்று அவர் பாக்ஸ்கான் நிறுவன பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.

விளக்கம்: இந்த மெகா உற்பத்தி மையத்தை அமைக்க ஆந்திரா ஏன் சரியான மாநிலமாக இருக்கும் என்பதையும் அவர் அந்த பிரதிநிதிகளிடம் விளக்கினார். மேலும், 2014 முதல் 2019 வரை தெலுங்கு தேசம் ஆட்சியில் ஆந்திராவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விளக்கினார். அந்த காலகட்டத்தில் எந்தெந்த ஐடி நிறுவனங்கள் ஆந்திராவில் முதலீடு செய்தன என்பது குறித்தும் அவர் விரிவாக எடுத்துக் கூறினார்.

முடிவு என்ன: அப்போது மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதில் சந்திரபாபு நாயுடு எடுத்து வரும் முயற்சியை பாக்ஸ்கானின் இந்திய பிரதிநிதி வி லீ பாராட்டினார். ஆந்திராவுடன் பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு நல்ல உறவே இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் தங்கள் உற்பத்தியை விரிவுபடுத்த உள்ளதாகத் தெரிவித்த அவர், ஆந்திர அரசு அதிகாரிகளுடன் விரிவான கூட்டத்திற்குப் பிறகு இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் பல பகுதிகளில் உற்பத்தி ஆலையை அமைக்க வேண்டும் என்பதே பாக்ஸ்கான் விருப்பமாக இருக்கிறது. அப்போது தான் ஒரு இடத்தில் பிரச்சினை என்றாலும் மற்ற இடத்தில் தொடர்ந்து உற்பத்தி நடக்கும். எனவே, பாக்ஸ்கான் ஆந்திராவில் முதலீடு செய்வது கிட்டதட்ட உறுதி என்றே சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+