மோடியைத் தீவிரவாதிகள் தாக்கக் கூடும்- பீகார் போலீஸை முன்பே எச்சரித்தை ஐபி
பாட்னா: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பாட்னாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது தீவிரவாதிகள் அவருக்குக் குறி வைக்கக் கூடும் என்று பீகார் காவல்துறையை முன்கூட்டியே உளவுத்துறை எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு 5 நாட்கள் முன்புதான் இந்த எச்சரிக்கையை மத்திய உளவுத்துறையான ஐபி, கடிதம் மூலம் பீகார் அரசுக்கு அனுப்பியுள்ளது.
பாட்னாவில் உள்ள ஐபி கிளையிலிருந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், நரேந்திர மோடிக்கு தீவிரவாதிகள் குழு குறி வைக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் உளவுத்துறை இதுகுறித்து எச்சரிக்கைவில்லை என்று கூறியுள்ள பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கும் ஐபி மறுப்பு தெரிவித்துள்ளது.
அக்டோபர் 23ம் தேதி பீகார் ஐபி இணை இயக்குநர் விவேக் ஸ்ரீவத்சாவா இதுதொடர்பாக எழுதியிருந்த கடிதத்தில், இந்துக்களின் தலைவராக கருதப்படும் நரேந்திர மோடி, சில முஸ்லீம் அமைப்புகளால் குறி வைக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. அவருக்கு தீவிரவாதிகள் குறி வைக்கலாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது என்று எழுதப்பட்டுள்ளது.
ஆனால் நரேந்திர மோடியைக் குறிப்பிட்டு ஐபியிடமிருந்து எந்தத் தகவலும் தங்களுக்கு வரவில்லை என்று பீகார் போலீஸார் கூறுகின்றனர்.
ஆனால் பீகார் மாநிலத்தை மட்டுமல்லாமல் மோடி தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் எச்சரிக்கைத் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக ஐபி விளக்கம் தெரிவித்துள்ளது.
பாட்னாவில் மோடி கூட்டம் நடந்த பகுதியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 6 பேர் பலியானார்கள். 83 பேர் காயமடைந்தனர். மொத்தம் 7 குண்டுகள் வெடித்தன. இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இந்தியன் முஜாஹிதீனே காரணம் என்று பீகார் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications