For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி ஆட்சியில் மத சுதந்திரம் இல்லை: அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுக்கும் மத்திய அரசு

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: மோடி ஆட்சியில் இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளதை மத்திய அரசு மறுத்துள்ளது.

அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் தனது ஆண்டறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் சிறுபான்மையினர் மீது நடக்கும் தாக்குதல்கள், கர்வாப்சி என்ற பெயரில் நடக்கும் கட்டாய மதமாற்றம் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Narendra Modi govt slams US panel report censuring India over minorities' 'ghar wapsi'

ஆளும் பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து சிறுபான்மையினரை தாக்கிப் பேசி வருகிறார்கள். மேலும் சிறுபான்மையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்கள் நடந்துள்ளதுடன் கட்டாய மதமாற்றமும் நடத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்சியில் இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில்,

அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்தியாவை பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் அறிக்கையை தயாரித்துள்ளனர் என்றார்.

இந்தியாவில் மத சுதந்திரம் பாதிக்கப்படமால் பார்த்துக் கொள்வேன் என்று கூறிய பிரதமர் மோடி பற்றி அந்த அறிக்கையில் பாராட்டி பேசப்பட்டுள்ளது.

English summary
Centre has slammed US panel report on religious freedom in India saying that it is prepared with limited understanding of
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X