நர்மதா அணையை 138 அடியாக உயர்த்த அனுமதி: 2.5 லட்சம் மக்கள் பாதிக்கப்படும் அபாயம்
அகமதாபாத்: நர்மதா அணையின் உயரத்தை 121 அடியிலிருந்து 138 அடியாக உயர்த்த அணை கட்டுப்பாட்டு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
குஜராத்தில் நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தர் சரோவர் அணையின் உயரத்தை உயர்த்தும் திட்டத்திற்கு மேதா பட்கர் தலைமையிலான நர்மதா பச்சோவ் அந்தோலன் என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அணையின் உயரத்தை 121 அடியிலிருந்து 138 அடியாக உயர்த்துவதன் மூலம், 2.5 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும் என்று கூறியுள்ள இந்த அமைப்பினர், அணையை உயர்த்துவதன் மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வசிப்பிடங்கள், விளைநிலங்கள், எண்ணற்ற இயற்கை வளங்கள் நீரிழ் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அணையின் உயரத்தை 17 அடி உயர்த்த அனுமதி அளித்தது அந்த மக்களுக்கு அளிக்கப்பட்ட அநீதி என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமரா? அல்லது குஜராத் மாநில முதல்வராக மட்டுமே இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ள நர்மதா பச்சோவ் அமைப்பினர், அணையினால் இடம்பெயர்வுக்கு ஆளான மக்களுக்கு உரிய இழப்பீடோ, வேலைவாய்ப்போ எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இது போன்ற பெரிய திட்டங்களால் பாதிக்கப்படும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது போன்ற சர்வதேச உடன்படிக்கைகள் ஆற்றில் விடப்பட்டுவிட்டன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications