ஜம்மு காஷ்மீர் தேர்தல்: அடம் பிடித்த பரூக் அப்துல்லா! இறங்கி ஆடிய ராகுல்! உருவானது வலுவான கூட்டணி!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் "இந்தியா" கூட்டணியை உயிர்ப்பித்திருக்கிறார் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. காங்கிரஸுடன் கூட்டணியே கிடையாது என பேசி வந்த தேசிய மாநாட்டுக் கட்சி நிறுவனத் தலைவர் பரூக் அப்துல்லாவை கூட்டணிக்கு ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறார் ராகுல். காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியில் சிபிஎம் கட்சியும் இணைவதால் வலிமையான "இந்தியா" கூட்டணி தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறுகிற தேர்தல். அதுவும் யூனியன் பிரதேசமாக கூறு போடப்பட்ட பின் நடைபெறும் முதல் தேர்தல் இது.

ஜம்மு காஷ்மீரில் பாஜக, காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, சிபிஎம் மற்றும் சிறிய மாநில கட்சிகள் களத்தில் உள்ளன. காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, சிபிஎம் ஆகியவை இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருப்பவை. இதனால் காஷ்மீர் தேர்தலில் இந்தியா கூட்டணி என்னவாகும்? என்கிற கேள்வி எழுந்தது.
அதேநேரத்தில் எந்த கட்சியுடனுமே கூட்டணி கிடையவே கிடையாது என தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவரான முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அடம் பிடித்தார். ஆனால் அவரது மகன் உமர் அப்துல்லா, காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் ஜம்மு காஷ்மீரில் நேற்று முதல் முகாமிட்டுள்ளனர். இன்று ஶ்ரீநகரில் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோரை ராகுல் காந்தி, கார்கே சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புகளில் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் "இந்தியா" கூட்டணி உயிர் பெறுவது உறுதியானது.
ராகுல் காந்தியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, காங்கிரஸும் தேசிய மாநாட்டுக் கட்சியும் இணைந்து செயல்படுவோம். ஏற்கனவே சிபிஎம் எங்களுடன் இணைந்து நிற்கிறது. ஆகையால் நாங்கள் இணைந்து மக்களுக்கு சிறப்பான சேவையாற்றுவோம். எங்களைப் பொறுத்தவரை தேர்தலுக்குப் பின்னர் இணைந்து செயல்படுவது தொடர்பாகவே ஆலோசிக்கிறோம். அதன் பின்னரே பொதுசெயல் திட்டம் பற்றி பேச இருக்கிறோம். முதலில் தேர்தலை சந்திப்போம். ஏற்கனவே நாங்கள் இந்தியா கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications