வக்பு: தமிழக அரசிடம் இருந்து காஷ்மீர் ஆளும் தேசிய மாநாட்டு கட்சி பாடம் கற்க வேண்டும்- மெகபூபா முப்தி
டெல்லி: வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்; வக்பு சட்டத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசிடம் இருந்து ஜம்மு காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி பாடம் கற்க வேண்டும் என்று அம்மாநில மூத்த அரசியல் தலைவரும் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை, நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒப்புதல் அளித்தார். இதனால் வக்பு வாரிய சட்ட திருத்தங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயன்றன. ஆனால் இதற்கு சட்டசபையில் சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனால் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: வக்பு சட்டத்துக்கு எதிரான தீர்மானத்துக்கு ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் சபாநாயகர் அனுமதி மறுத்திருப்பது வேதனைக்குரியதாகும். ஜம்மு காஷ்மீர் மக்கள் வலிமையான ஆதரவு தீர்ப்பை வழங்கிய போதும் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி, பாஜகவின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணை போகிறது.
ஜம்மு காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி, தமிழ்நாடு அரசிடம் இருந்து பாடம் கற்க வேண்டும். தமிழ்நாடு அரசுதான் வக்பு சட்ட திருத்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள ஜம்மு காஷ்மீர் அரசு, மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஆதரிப்பது. விவாதிக்க கூட மறுப்பது என்பது துணிச்சலற்ற தன்மையைத்தான் காட்டுகிறது. இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications