நேஷனல் ஹெரால்டு வழக்கு: மத்திய அரசுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது - அருண் ஜெட்லி
டெல்லி: சர்ச்சைக்குரிய நேஷனல் ஹெரால்டு வழக்கிற்கும், மத்திய அரசிற்கும் எந்தவித தொடர்புமில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கூறியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு' சொத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கப் பிரிவினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
நாட்டின் முதலாவது பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்த போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தொடங்கப்பட்டதுதான் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. பின்னாளில் பலத்த நஷ்டத்தை சந்தித்தது.

இந்த நஷ்டத்தை சரிகட்ட அப்பத்திரிகை நிர்வாகம் சுமார் 90 கோடி ரூபாய் வரை கடன்களை பெற்றிருந்தது. கட்சி விதிகளை மீறி.. இந்த கடன்களை தீர்க்க முடியாமல், அப்பத்திரிகை தவித்து வந்த நிலையில், சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் சேர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பணத்திலிருந்து கட்சி விதிமுறைகளை மீறி 90 கோடி ரூபாயை அப்பத்திரிகைக்கு அளித்து, கடனை அடைத்தனர்.
நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் விதிகளை மீறி கட்சிக்கு சொந்தமான நன்கொடையை சம்பந்தப்பட்டவர்கள் எவ்வாறு முறைகேடாகப் பயன்படுத்தினர் என்பதை விவரிக்கும் அறிக்கையையும் அவர் நீதிமன்றத்தில் 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தாக்கல் செய்தார்.
அதில், சோனியா, ராகுலின் செயலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, ஆஸ்கர் ஃபெர்ணான்டஸ், மத்தியில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதமரின் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றிய சாம் பிட்ரோடா, மூத்த பத்திரிகையாளர் சுமன் துபே ஆகியோர் உடந்தையாக இருந்ததாக சுப்பிரமணியன் சுவாமி புகார் கூறியிருந்தார்.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பாஜக வேண்டுமென்றே இது போன்று செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ், நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டது. ஆனால், இந்த வழக்கில் எந்தவித பங்குமில்லை என மத்திய அரசு மறுத்துள்ளது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அளித்த பேட்டியில், நேஷனல் ஹெரால்டு வழக்கிற்கும் அரசிற்கும் எந்தவித சம்மந்தமில்லை. நேஷனல் ரொல்டு தொடர்பாக அமலாக்கப் பிரிவில் எந்த ஆவணமும் இல்லை. அமலாக்கப்பிரிவு இயக்குநர் மாற்றப்பட்டதற்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நேஷனல் ஹெரால்டு வழக்கில், அரசு எதுவும் செய்யவில்லை. எந்த நோட்டீஸூம் வழங்கவில்லை. அமலாக்கப்பிரிவு இதுவரை எந்த கடிதமும் எழுதவில்லை. நோட்டீஸூம் வழங்கவில்லை.
காங்கிரஸ் கட்சி, நேஷனல் ஹெரால்டு வழக்கில் கையாண்ட பணப்பரிமாற்றத்தை பெரிதாக ஆக்கி நாட்டை முடக்குகின்றனர். எதற்காக காங்கிரஸ் நாடாளுமன்றத்தை முடக்குகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் நிறுத்த வேண்டும். நேஷனல் ஹெரால்டு வழக்கை காங்கிரஸ் கட்சியினர் சட்டப்படி தான் சந்திக்க வேண்டும்.
சிலர் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு தங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது என கருதுகின்றனர். மற்றவர்களுக்கு இது முடியாது என நினைக்கின்றனர். நாட்டை பலவீனப்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் இது பலனளிக்காது. இமாச்சல பிரதேச முதல்வர் வீர்பத்ர சிங்கிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தான் துவக்கப்பட்டது.
அனைத்து மாநில அரசுகளின் ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில் ஜி.எஸ்.டி., மசோதா உருவாக்கப்பட்டது. காங்கிரஸ் கொண்டு வந்த ஜி.எஸ்.டி., மசோதாவில், அக்கட்சி கூறிய மூன்று நிபந்தனைகள் எதுவும் இல்லை. இதற்கு தற்போது தீர்வு காணப்பட்டது. இந்த மசோதா குறித்து காங்கிரஸ் கட்சிக்கு விளக்க அரசு பல மைல் தூரம் நடந்துள்ளது. ஆனால் நாட்டை முடக்குவது தான் காங்கிரசின் எண்ணம். ஆதாரமற்ற காரணங்களை கூறி நாட்டை முடக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications