மேகி நூடுல்ஸ் சாப்பிட லாயக்கில்லை: கண்டுபிடித்த டெல்லி, தற்காலிக தடை விதித்த கேரளா
டெல்லி: டெல்லி அரசு பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்த மேகி நூடுல்ஸை சோதனை செய்து பார்த்ததில் அது சாப்பிட தகுதியற்றது என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கேரள அரசு மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
நெஸ்ட்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக மோனோசோடியம் க்ளூட்டமேட் மற்றும் ஈயம் இருப்பதை உத்தர பிரதேச மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் கண்டுபிடித்தது. இதையடுத்து நெஸ்ட்லே நிறுவனம் மீது உத்தர பிரதேசத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், மாதுரி தீக்சித் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி அரசு 13 இடங்களில் இருந்து மேகி நூடுல்ஸ் மாதிரிகிளை சேகரித்து ஆய்வகத்தில் சோதனை நடத்தியது.

மேகி
டெல்லி அரசு செய்த சோதனையில் மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம் இருப்பது தெரிய வந்துள்ளது. சேகரிக்கப்பட்ட 13 மாதிரிகளில் 10ல் அதிக அளவு ஈயம் இருப்பதை டெல்லி அரசு கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து மேகி நூடுல்ஸ் சாப்பிட தகுதியற்றது என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

கேரளா
உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் மேகி நூடுல்ஸின் விற்பனைக்கு கேரள மாநில அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு நடத்தும் 1,200 கடைகளில் மேகி நூடுல்ஸை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
ஹரியானா, ஒடிஷா, உத்தரகண்ட், குஜராத், பீகார், பஞ்சாப், அஸ்ஸாம் மற்றும் தமிழகம் ஆகிய 8 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மேகி நூடுல்ஸ் மாதிரிகளை அரசு ஆய்வகங்களுக்கு சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நெஸ்ட்லே
நெஸ்ட்லே நிறுவனமோ மேகி நூடுல்ஸை தங்களுடையது மற்றும் வெளி ஆய்வகங்களில் சோதனை செய்தததாகவும் அதில் அளவுக்கு அதிகமாக ஈயமோ, மோனோசோடியம் க்ளூட்டமேட்டோ இல்லை என்று தெரிவித்துள்ளது.

அரசு
மேகி விவகாரம் குறித்து நெஸ்ட்லே நிறுவன அதிகாரிகளுக்கு டெல்லி அரசு சம்மன் அனுப்பியுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் பிற பிராண்ட் நூடுல்ஸுகளையும் சோதனை நடத்த உணவுத் துறை தீர்மானித்துள்ளது.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications