ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல்கள் அட்டூழியம்.. பாதுகாப்பு படை மீது கொடூர தாக்குதல்.. ஒருவர் வீர மரணம்
தும்கா: ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் - பாதுகாப்பு படையினர் இடையே இன்று அதிகாலை பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் மரணமடைந்தார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மாவட்டத்தில் சஸ்கஸ்த்ரா சீமாபால் என்ற பகுதியிலிருந்து டல்டங்கல் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிகளில் மறைந்திருந்த நக்சலைட்டுகள் சிலர், பாதுகாப்பு படையினர் வந்த வாகனங்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

எதிர்பாராத இந்த தாக்குதலால் பாதுகாப்பு படையினர் நிலைகுலைந்தாலும், சிறிது நேரத்தில் சுதாரித்து கொண்டனர். பின்னர் நக்சலைட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் பணியில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் - நக்சலைட்டுகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை மூண்டது.
துப்பாக்கி சண்டையின் போது பாதுகாப்பு படை வீரர்கள் சுமார் 5 பேர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உயரதிகாரிகள் மோதல் நடைபெற்ற இடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படை வீரர்களை அனுப்பி வைத்தனர். அதிகாலை நேரம் துவங்கி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த துப்பாக்கி சண்டை நீடித்தது. பாதுகாப்பு படையினரின் ஆக்ரோஷ தாக்குதலில் 5 நக்சலைட்டுளுக்கு துப்பாக்கி குண்டுகளால் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது
ஆனால் மோதல் நடைபெற்ற இடத்திலிருந்து காயமடைந்த நக்சலைட்டுகள் தப்பியுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அவர்களை தீவிரமாக தேடும் பணியை பாதுகாப்பு படையினர் முடுக்கி விட்டுள்ளனர். துப்பாக்கி குண்டுகளால் படுகாயமடைந்த அவர்கள், தப்பி சென்று உயிர் பிழைத்துள்ளார்களா அல்லது அடர்ந்த வனத்தின் வேறு ஏதாவது பகுதியில் உயிரிழந்து கிடக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
ஒருவேளை காயமடைந்த நக்சலைட்டுகள் உயிர் பிழைத்திருந்தால், மருத்துவமனைக்கு செல்லும் வாய்ப்பு உள்ளதால், யாரேனும் சந்தேகப்பம்படி வந்தால் தகவல் அளிக்குமாறு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நக்சலைட்டுகளுடனான மோதலின் போது காயமடைந்த பாதுகாப்பு படை வீரர் நீரஜ் சத்துரி, குண்டு காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். இதனையடுத்து அவரை தனி ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்காக ராஞ்சிக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பாதி வழியிலேயே அவர் வீரமரணம் அடைந்தார்.
இவரை தவிர மேலும் 4 பாதுகாப்பு படை வீரர்கள் நக்சல்கள் நடத்திய திடீர் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications