சத்தீஷ்கர் தேர்தல்: ஓட்டுப் போட்டால் விரல்களைத் துண்டிப்போம்: கிராம மக்களை மிரட்டும் நக்சலைட்டுகள்
டெல்லி: அடுத்தமாதம் நடைபெற உள்ள சத்தீஷ்கர் தேர்தலில் யாரும் ஓட்டு போடச் செல்லக் கூடாது, அப்படியும் யாராவது திருட்டுத்தனமாக ஓட்டுப்போட்டால், ஓட்டு போட்ட மை அவர்களது விரல்களில் இருந்தால் அந்த விரல்கள் உடனடியாக துண்டிக்கப் படும் என அதிரடி மிரட்டல் விடுத்துள்ளனர் நக்சலைட்டுகள்.
சத்தீஷ்கார் மாநிலம், நக்சலைட்டுகள் நடமாட்டம் மிகுந்த மாநிலம். கடந்த காலங்களில், தேர்தலை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதுடன் நக்சலைட்டுகள் நிறுத்திக்கொள்வார்கள். ஆனால், இம்முறை கடும் விளைவுகள் ஏற்படும், விரல்களைத் துண்டித்து விடுவோம் என அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

சட்டசபைத் தேர்தல்...
90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 11 மற்றும் 19-ந் தேதி என இரு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் ஏற்பாடுகள் முழுவீச்சில் அங்கு நடைபெற்று வருகின்றது.

சுவரொட்டிகள்...
நக்சல்களின் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார் மாவட்டத்தில், கடந்த வாரத்தில் இருந்து ‘ஓட்டு போடக்கூடாது' என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள் நக்சலைட்டுகள்.

எச்சரிக்கை....
ஓட்டுப்பதிவு நாளன்று வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மிரட்டுகிறார்கள். மீறி ஓட்டு போட்டால், கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறார்கள்.

விரல்கள் பத்திரம்...
‘யாருடைய விரலிலாவது ஓட்டு போட்ட மை காணப்பட்டால், அவர்களின் விரல்களை துண்டித்து விடுவோம்' என மிரட்டியும் வருகிறார்கள்.

கூடுதல் படை குவிப்பு...
இந்த மிரட்டலை கருத்தில் கொண்டு, சத்தீஷ்கர் மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதலாக 40ஆயிரம் துணை ராணுவப்படையினர் அனுப்பி வைத்துள்ளது. அங்கு ஏற்கனவே, 27 ஆயிரம் துணை ராணுவப்படையினர், நக்சலைட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications