தேர்தலில் மோசமான நிலைக்கு சவானே காரணம்: தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு
மும்பை: மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு மோசமான நிலை ஏற்பட்டதற்கு முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவான் தான் காரணம் என்று தேசியவாத காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக இதுவரை 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிவசேனா 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 36 மற்றும் 29 தொகுதிகளை கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் இது குறித்து தேசியவாத காங்கிரஸின் நவாப் மாலிக் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அனைத்திற்கும் சவான் தான் காரணம். அவருக்கு மகாராஷ்டிராவின் பிரச்சனைகள் புரியவில்லை. அவர் சரியான முடிவுகளை எடுக்கவில்லை. செயல்பட வேண்டிய நேரத்தில் அவர் ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸின் நிலைமைக்கு அவர் தான் பொறுப்பு என்றார்.
மகாராஷ்டிராவில் 15 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தற்போதைய தேர்தலுக்கு முன்பு தான் உடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications