For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒடிஷாவில் காலூன்றும் பாஜக - 7 இடங்களை கைப்பற்றுமாம்: என்.டி.டி.வி. கணிப்பு

By Mathi
|

புவனேஸ்வர்: ஒடிஷாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி 13 இடங்களைக் கைப்பற்றினாலும் பாஜகவுக்கு லக் பிரைசாக 7 தொகுதிகள் கிடைக்கக் கூடும் என்கிறது என்.டி.டி.வி. கருத்து கணிப்பு.

லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக என்.டி.டிவி. வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகள் ஒடிஷா புள்ளிவிவரங்கள் ஆச்சரியமளிக்கக் கூடியதாக இருக்கிறது. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இம்மாநிலத்தில் எடுக்கப்பட்ட கணிப்புகளில் பாஜகவுக்கு ஒரு இடம் கிடைக்கலாம்; காங்கிரஸூக்கு 3 இடங்கள் கிடைக்கலாம் என்ற ஊசலாட்டம் இருந்தது.

தற்போது இந்த மாநிலத்தில் நிலைமை தலைகீழாகிப் போய் காங்கிரஸுக்கு 1 இடமும் பாஜகவுக்கு 7 இடங்களும் கிடைக்கும் என்ற நிலை உருவாகி உள்ளது.

ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம்

ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம்

ஒடிஷா மாநிலத்தில் 21 தொகுதிகள் உள்ளன. இதில் பிஜூ ஜனதா தளம் அசைக்க முடியாத சக்தியாக 13 இடங்களைக் கைப்பற்றும். பாஜக 7, காங்கிரஸ் 1 இடத்தில் வெல்லும். கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இம்மாநிலத்தில் 6 இடங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மே.வங்கத்தில் மமதா அபாரம்

மே.வங்கத்தில் மமதா அபாரம்

42 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் இம்முறை மமதாவுக்கு 11 தொகுதிகள் கூடுதலாக அதாவது 30 தொகுதிகள் கிடைக்குமாம். இடதுசாரிகளுக்கு 8, காங்கிரஸுக்கு 4 தொகுதிகளே கிடைக்கும்.

ஜார்க்கண்ட்டில் பாஜக ஸ்வீப்

ஜார்க்கண்ட்டில் பாஜக ஸ்வீப்

14 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக அணி 12, காங்கிரஸ் 2 இடங்களில் வெல்லும்.

சத்தீஸ்கரில் பாஜக

சத்தீஸ்கரில் பாஜக

11 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் பாஜக 8- காங்கிரஸ் 3 இடங்களில் வெல்லும்.

English summary
Riding on a perceived Modi wave, the BJP is set to win 7 of the 21 Lok Sabha seats in Odisha, replacing Congress as the main Opposition party in the state, NDTV opinion poll has forecast. The BJP had drawn a blank in the 2009 general election. The Congress, which had cornered six seats five years ago, will have to rest content with a single seat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X