For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் தேர்வு... தமிழக மாணவர்களுக்கு அநீதி- தம்பித்துரை

நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று அதிமுக எம்பியும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பித்துரை கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: 2012ல் நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக அங்கம் வகித்த மத்திய அரசு என்று லோக்சபா எம்.பி தம்பித்துரை குற்றம் சாட்டியுள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் தரக் கோரி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை தமிழக அமைச்சர்கள், லோக்சபா சபாநாயகர் தம்பித்துரை தலைமையில் சந்தித்து வலியுறுத்தினர்.

NEET Exam Government continue its fight for the rights says Thambidurai

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர், தங்கள் ரத்தத்தில் எழுதிய கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளனர். பல்வேறு தரப்பில் இருந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவை சந்தித்து தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், சிவி சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் டெல்லி சென்று சந்தித்தனர்.

பிற்பகலில் பிரதமர் மோடியையும் சந்தித்து பேசினர். அப்போது நீட் தேர்தவில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தனர்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தோம் என்று கூறினார்.

2012ல் நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக அங்கம் வகித்த மத்திய அரசு என்று கூறிய தம்பித்துரை, 2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் நீட் தேர்வு நிறுத்தப்பட்டது

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் மீண்டும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தினோம்

நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. பொதுவான தேர்வு என்பது தேவையற்ற ஒன்று.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை உள்ளது என்றும் எனவும் லோக்சபா துணை தலைவர் தம்பிதுரை தெரிவித்தார்.

English summary
TN Ministers led by Dy Speaker M Thambidurai met Union Law Min Ravi Shankar seeking President assent for 2 Bills exempting TamilNadu from NEET. Thambidurai said the government would continue its fight for the rights of state's students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X