உங்களை பார்த்து தானே மீண்டும் பாஜக ஆட்சியை கொடுத்தோம், ஆனால் நீங்களோ? நெட்டிசன்கள் வேதனை! #வாஜ்பாய்
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள் அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த வாஜ்பாய்க்கு சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
அணுகுண்டு சோதனை
வாஜ்பாய் என்ற உடன் உங்களுக்கு நினைவுக்கு வருவது எது என்பதை பதிவு செய்யுங்கள்
எனக்கு அவரை நினைத்தால் நியாபகம் வருவது,
பொக்ரான் அணுகுண்டு சோதனை!!
|
இறைவனை வேண்டுகிறேன்
வாழும் மாகாத்ம இறைவனடி சேர்ந்தது...நிகழ் வாழும் மகாத்மா இறைவனடி சேர்ந்தது...நிகழ் காலத்தில் அனைத்து தரப்பு பாரத மக்களால்
நேசிக்கப்பட்ட தலைவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்....அடல் பிஹாரி வாஜ்பாய்
|
வேதனைபட்ட வாஜ்பாய்
குஜராத்தில் 2000 முஸ்லீம் மக்களை மோடி கொன்று குவித்த போது இனி எந்த முகத்தை கொண்டு அந்நிய நாடுகளுக்கு செல்வேன் என வேதனை பட்டவர் திரு #வாஜ்பாய்
|
மாமனிதர் வாஜ்பாய்
இந்தியா சுதந்திரம் அடைந்து 52ஆண்டுக்கு பிறகு (1999-2004)ஒரு சிறந்த பிரதமரை மக்கள் தேர்வு செய்துள்ள அந்த மாமனிதர் வாஜ்பாய்.
|
ஆனால் நீங்களோ?
உன் ஆட்சியை பார்த்து தானே
பாஜக மீண்டும் ஆட்சியை கொடுத்தோம். ..
ஆனால் நீங்களோ.....
|
மீண்டும் பிறந்து வருவீர்கள்
கார்கில் நாயகர் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவை தலைநிமிர செய்த தங்க நாற்கர சாலை நாயகர்
#வாஜ்பாய்_ஜி
மீண்டும் பாரதத்தில் பிறந்து வருவீர்கள்
#போய்வாருங்கள்_மகாத்மாவே












Click it and Unblock the Notifications