எவ்ளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா.. பிடிடா கரப்பான்பூச்சிய.. இணையத்தில் வைரலாகும் சேலஞ்ச்
ஐஸ் பக்கெட் சேலஞ் தொடங்கி எவ்வளவோ ஆன்லைன் சேலஞ்ச் கேள்விப்பட்டிருப்போம். அதுல ஒரு சில சேலஞ்சுகள் ஏற்று கொள்ள கூடிய வகையில் இருக்கும். ஒரு சில சவால்கள் சொன்னா நம்மை பார்த்து சிரிக்கிற அளவு இருக்கும். இப்போ ட்ரெண்டாகிட்டு இருக்கிற சவால் கரப்பான்களை வச்சு.
கரப்பான் பூச்சிய வச்சு ஒரு சேலஞ்ச் கடந்த 1 மாசமா ட்ரெண்ட் ஆகிட்டு வருது. பதறாதீங்க சவால் விட்டது சீன நாட்டவர் இல்ல, மியான்மர் நாட்டவர். பேரு அலெக்ஸ் அங். இவரு தான் இந்த சேலஞ்சை முதல்ல ஆரம்பிச்சு வச்சிருக்கிறது.

அலெக்ஸ் அங் போன மாசம் தன்னோட ஃபேஸ்புக் பக்கத்துல ஒரு செல்ஃபிய ஷேர் பண்ணாரு. அதுல அவரோட முகத்துல ஒரு கரப்பான் பூச்சி இருந்தது. கரப்பான் பூச்சிய தன்னோட முகத்துல வச்சு செல்ஃபி எடுத்த அலெக்ஸ் அங், இதே போல உங்களால செய்ய முடியுமான்னு கேட்டு சேலஞ் பண்ணியிருக்காரு.
இது போதாதா அகில உலக நெட்டிசன்களுக்கு. எப்படா சவால் கிடைக்கும்னு கால்கடுக்க காத்து கிடந்தவங்க, இப்போ கரப்பான் பூச்சிய தேடி கண்டுபிடிச்சி, அத முகத்துல மேய விட்டு செல்ஃபியா எடுத்து தள்றாங்க பா.
மனுஷங்களோட செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்ல ஷேர் பண்றது மாதிரி, இப்போ அசால்ட்டா கரப்பான் பூச்சிகளோட செல்ஃபி எடுத்து ஷேர் மேல ஷேர் பண்ணிகிட்டு இருக்காங்க.
அலெக்ஸ் அங் விட்ட சேலஞ்ச் இதுவரை 18,000 ஷேர், 500 கமெண்ட், 5700 லைக்குகளை வாங்கியிருக்கு. இந்த சேலஞ்ச் ஃபேஸ்புக்ல மட்டும் இல்ல இப்போ இன்ஸ்டாகிராம்லயும் கொஞ்சம் கொஞ்சமா பரவிட்டு வருது.
அலெக்ஸாவது ஒரு கரப்பான தான் மூச்சில ஓட விட்டாரு. ஆனா அந்த சேலஞ்ச ஏத்துகிட்ட பல பேரு எவ்ளோ கரப்பான் கிடைக்குதோ, அவ்வளவையும் முகத்துல மேய விட்றாங்க. இந்த மாதிரி அடிக்கடி பரவும் ஆன்லைன் சேலஞ்ச் கலாச்சாரத்துக்கு எப்போ தா விடிவுகாலம் பிறக்குமோ..!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications