பிறந்தது 2017.. நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்.. கடுங்குளிரிலும் டெல்லியில் களைகட்டியது !
தலைநகர் டெல்லியில் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவுல் ஏராளமானோர் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
டெல்லி: நாடு முழுவதும் உற்சாகமாக 2017 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவுல் ஏராளமானோர் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பழையன மறந்தும் புதிய சிந்தனைகள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கையோடு பிறந்துவிட்டது புதிய ஆண்டு 2017. உலகம் முழுவதும் முக்கிய நகரங்களில் வாண வேடிக்கையுடன் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.

புத்தாண்டு பிறந்ததையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஆடல், பாடல் கொண்டாட்டம் களைகட்டியது. வட மாநிலங்களில் தற்போது கடுமையாக குளிர் நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியில் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவில் திரண்ட இளைஞர்கள் புத்தாண்டை வெகுவிமரிசையாக கொண்டாடினர்.
மத்தியபிரதேசம், ஹைதராபாத், பெங்களூரில் வெகு விமரிசையாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது. புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குதுாகலத்துடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னையில் வானவேடிக்கையுடன் பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்த போதும் இந்தாண்டும் வழக்கம் போல் சென்னை வாசிகள் புத்தாண்டை கொண்டாடினர். பெசன்ட்நகர் கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்காணோர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தேவாலயங்கள், கோயில்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications