Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவனிடம் "கூலாக" அதை சொன்ன மனைவி.. திகைத்த உறவுகள்.. இதுவல்லவா கிரேட் எஸ்கேப்.. நம்ம இந்தியாவா இது?

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த ஹனிமூன் கொலையின் அதிர்வலைகள் இன்னமும் அடங்கவில்லை. இந்த கொலையை போலவே ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இன்னொரு பெண், தன்னுடைய கணவரை கொலை செய்துள்ளார்.. அதேபோல, உத்தரப்பிரதேச மாநிலத்திலும் ஒரு கொலை நடக்கவிருந்தது. ஆனால் அந்த கணவர் கடைசி நேரத்தில், கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டார்.. என்ன நடக்கிறது இந்தியாவில்?

கடந்த மே மாதம் ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ஆகியோருக்கு திருமணம் நடந்துள்ளது.. இரு குடும்பத்தினருமே தொழிலதிபர்கள் ஆவர். தம்பதி இருவரும் தேன் நிலவுக்காக சிரபுஞ்சிக்கு சென்றனர். கடந்த மே 23 ந்தேதி, அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் குடும்பத்தினர் மத்திய பிரதேச போலீசில் புகார் தந்தனர். இதற்கு பிறகுதான், மாப்பிள்ளை ராஜாவின் சடலத்தை கண்டுபிடித்தனர்.

madhya pradesh India

கணவரை கொலை செய்தது சோனம் என்பதும், கள்ளக்காதலுக்காக இந்த கொலையை கூலிப்படையை வைத்து சோனம் அரங்கேற்றியிருந்ததும் அம்பலமானது. கொலைக்கான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொலை செய்த 5 பேர் கைதாகிவிட்டனர்.

கோடாரி கணவன்

ஹனிமூனில் இருக்கும்போதே, கணவரை கொலை செய்ய பலமுறை முயன்றாராம் சோனம்.. பிறகுதான் கூலிப்படையை ஏற்பாடு செய்திருக்கிறார்.. கணவரை கோடாரியால் வெட்டுவதை, மறைந்து நின்று பார்த்து ரசித்தாராம் சோனம்..

இது தொடர்பான விசாரணைகள் நடந்து வரும்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. அங்குள்ள கர்வா மாவட்டத்தில் பஹோகுந்தர் என்ற கிராமம் உள்ளது.. அங்கு புத்தநாத் சிங் என்பவருக்கு சுனிதா என்ற 22 வயது பெண்ணுடன் கடந்த 36 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

சமாதானம் - அட்வைஸ்

ஆனால், 'புத்தநாத்தை சுனிதாவுக்கு பிடிக்கவில்லை.. இதை தன்னுடைய குடும்பத்தினரிடம் சுனிதா சொல்லி உள்ளார்.. அப்படியிருந்தும், அவரை சமாதானம் செய்து, அறிவுறுத்தி கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்களாம்.

madhya pradesh India

இதனால் ஆத்திரமடைந்த சுனிதா, கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்துவிட்டார்.. பூச்சிமருந்து கலந்த உணவை, தந்து சாப்பிட வைத்துள்ளார்.. சிறிது நேரத்தில் மாப்பிள்ளை புத்தாசிங் பரிதாபமாக இறந்துவிட்டார்.. இதில் கொடுமை என்னவென்றால், ஹனிமூன் தம்பதிக்கு திருமணமான நாளில்தான், இந்த தம்பதிக்கும் திருமணமானதாம்.. இப்போது இரு மாப்பிள்ளைகளுமே இறந்துவிட்டார்கள்.. இந்த அதிர்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே, அடுத்த அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

9 நாட்கள் சடங்கு

உ.பி. மாநிலத்தை சேர்ந்த தம்பதி சுனில் - குஷ்பு.. இவர்கள் இருவருக்கும் கடந்த மே 17ம் தேதி திருமணம் நடந்துள்ளது.. 9 நாட்கள் தன்னுடைய கணவர் வீட்டில் தங்கியிருந்த குஷ்பு, திருமண சடங்குக்காக, தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றார்.. பிறகு திடீரென ஏற்கெனவே தான் காதலித்து வந்த காதலனோடு வீட்டை விட்டு கிளம்பி சென்றுவிட்டார் குஷ்பு.

இதனிடையே தன்னுடைய மனைவி குஷ்புவை காணவில்லை என்று சுனில் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார்.. போலீசாரும் குஷ்புவை வலைவீசி தேடினார்கள்... ஆனால், குஷ்பு தன்னுடைய காதலனுடனேயே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்..

கணவர் சுனிலை தனக்கு பிடிக்கவில்லை என்றும், காதலனோடு சென்று வாழ விருப்பமாக இருந்ததால், அவருடன் சென்றுவிட்டதாகவும், இனிமேலும் அவருடன்தான் வாழ விரும்புவதாகவும் சொன்னார்.. இதை கேட்ட சுனிலுக்கு தலையே சுற்றியது..

குஷ்பு சந்தோஷம்

சிறிது நேரம் யோசித்த சுனில், இறுதியில் தன்னுடைய மனைவியின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டார்.. தன்னுடைய காதலனுடனேயே மனைவி சென்று சந்தோஷமாக வாழட்டும் என்று போலீசாரிடம் சொன்னார். இதனால் ஸ்டேஷனிலேயே 3 பேருக்குள்ளும் சுமூகமாக பேச்சுவார்த்தை முடிந்தது.

பிறகு கல்யாணத்துக்கு போடப்பட்ட நகைகள் அனைத்தையும் சுனில் குஷ்புவிடமே திருப்பி தந்துவிட்டார்.. அந்த நகைகளை பெற்றுக் கொண்டு, காதலனுடன் கிளம்பி சென்றுவிட்டார் குஷ்பு.

கிரேட் எஸ்கேப்

இது குறித்து சுனில் சொல்லும்போது, "குஷ்புவுடன் ஹனிமூன் போகலாம் என்றெல்லாம் கனவு கண்டிருந்தேன்.. அதுவும் நைனிடாலுக்கு அழைத்து சென்று சர்ப்ரைஸ் செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தேன். அதற்குள் காதலன் விவகாரம் வந்துவிட்டது. காதலனுடனேயே அனுப்பி வைத்துவிட்டேன்.

நல்லவேளை, ஹனிமூனில் உயிரிழந்த ராஜாவை போல நான் ஆகவில்லை.. ஹனிமூன் போகாமல் நான் உயிரோடு பிழைத்துள்ளேன்.. இன்னொரு ராஜா ரகுவன்ஷியாக நான் ஆகவில்லை. என் வாழ்க்கை அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது" என்று நொந்துபோய் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+