ஆகஸ்ட் 5ம் தேதி துணை குடியரசு தலைவர் தேர்தல்! அன்றே வாக்கு எண்ணிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆகஸ்ட் 5ம் தேதி துணை குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். ஆகஸ்ட் 5ம் தேதி மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அவர் டெல்லியில் இன்று அளித்த பேட்டியின்போது கூறினார்.

Next Vice-President of India elections on August 5, counting same day

லோக்சபா, மாநிலங்களவை உறுப்பினர்கள் துணை ஜனாதிபதியை வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள்.

வேட்புமனு தாக்கலுக்கு ஜூலை 18ம் தேதி கடைசி நாளாகும். 19ம்தேதி வேட்பமனு பரிசீலனை நடைபெறும். 21ம் தேதி வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாளாகும்.
வேட்பாளர் ரூ.15 ஆயிரம் டெபாசிட் தொகை கட்ட வேண்டும்.

தேர்தல் தேவைப்பட்டால்தான் நடக்கும் என்று நசீம் ஜைதி தெரிவித்துள்ளார். ஒருமனதாக குடியரசு துணை தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் தேர்தல் அவசியப்படாது. குடியரசு தலைவர் பதவிக்கு ஜூலை 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The elections to the next Vice- President of India will be held on August 5. The announcement was made by the Election Commission of India.
Please Wait while comments are loading...