பீகார் சட்டசபை தேர்தல்: லாலுவுடன் தொடரும் 'பஞ்சாயத்து'- நிதிஷ் தனித்து போட்டி?
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தனித்துப் போட்டியிடும் எனக் கூறப்படுகிறது.
பீகாரில் வருகிற அக்டோபர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் லோக்சபா தேர்தலில் கூட்டணி முறிந்ததால் இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டது. இதில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது.

நிதிஷ்- லாலு ஜோடி
இதனைத் தொடர்ந்து நிதிஷ்குமார் லல்லுபிரசாத் யாதவுடன் கை கோர்த்தார். இடைத் தேர்தல்களில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளமும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளமும் ஒன்றாக இணைந்து போட்டியிட்டன.

ஜனதா பரிவார்
அத்துடன் ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து தேசிய அளவில் ஜனதா பரிவார் என்ற அமைப்பை உருவாக்கவும் முயற்சி நடந்தது. ஆனால் இதில் சிக்கல் உருவானதால் இணைப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் மாநில அளவில் ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டிரிய ஜனதா தளமும் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது.

சிக்கல் உருவானது
இதில் முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிக்க வேண்டும் என்று நிதிஷ்குமாரும், முதல்வரை தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்பு தேர்ந்தெடுக்கலாம் என்று லல்லுபிரசாத் யாதவும் கூறியதால் கூட்டணி உருவாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வர் மாஞ்சியை ஜனதா பரிவாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் லாலு வலியுறுத்துகிறார்.

ஐக்கிய ஜனதா தளம் தனித்து போட்டி?
இது போன்ற முட்டுக் கட்டைகளால் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனித்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பாட்னாவில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நிதிஷ்குமார், பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி ஏற்பட்டால் நன்றாக இருக்கும். கூட்டணி ஏற்படா விட்டால் தனித்து போட்டியிட தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தனித்து போட்டியிடும் என்றே கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications