ஆண்மை சோதனை, என்கவுண்ட்டருக்கு பயந்து தனிநாடு ? ஐநாவிடம் நித்தியானந்தா தந்த மனுவில் சுவாரசியம்
Recommended Video
டெல்லி: இந்தியாவில் இந்துக்கள் சித்திரவதை செய்யப்படுவதாக ஐநா சபையிடம் திடுக்கிடும் புகார் மனுவை கொடுத்துள்ளார் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா.
பலாத்கார வழக்கு, பெண்கள், குழந்தைகள் கடத்தல், நில மோசடிகள் என பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கியவர் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா. இந்த வழக்குகளை எதிர்கொள்ள முடியாமல் நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார் நித்தியானந்தா.
தென் அமெரிக்கா நாடுகளில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என தனிநாடு பெயர் சூட்டியுள்ளார் நித்தியானந்தா. அத்துடன் நிற்காமல் இந்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகிறார் சாமியார் நித்தியானந்தா.

தனி கொடி, ஆட்சி மொழி
தாங்கள் வசிக்கும் நாடுகளில் இந்து மதத்தை பின்பற்ற முடியாதவர்கள் கைலாசா தனிநாட்டில் குடியேறலாம் எனவும் அழைப்பு விடுத்திருக்கிறார். அத்துடன் அந்த நாட்டுக்கு தனி கொடி, ஆட்சி மொழி என அலட்டல் வேலைகளை காட்டி வருகிறார் நித்தியானந்தா.

ஐநாவிடம் மனு
அவரது அத்தனை நடவடிக்கையுமே தேசதுரோக நடவடிக்கைகள் என்பது அப்பட்டமான ஒன்று. இந்த நிலையில் தங்களது தனிநாட்டை ஐநா சபை அங்கீகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை மனுவை கொடுத்திருக்கிறார் நித்தியானந்தா.

இந்தியாவில் சித்ரவதை
அதில் இந்திய அரசு மீது ஏராளமான புகார்களை அடுக்கியிருக்கிறார் நித்தியானந்தா. இந்தியாவில் இந்துக்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர்; தம்மை ஆண்மை பரிசோதனைக்குட்படுத்தினர் என புகார் கூறியுள்ளார் நித்தியானந்தா.

என்கவுண்ட்டர் என மிரட்டல்
மேலும் தம் மீதான வழக்குகளை ஒப்புக் கொள்ளாவிட்டால் என்கவுண்ட்டரில் தம்மை சுட்டுக் கொல்வோம் என போலீசார் மிரட்டியதாகவும் ஐநாவிடம் அளித்த புகார் மனுவில் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். இதனால் தமது கைலாசா தனிநாட்டை உடனே ஐநா அங்கீகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் நித்தியானந்தா.

தேசதுரோக வழக்குகள்
ஐநா சபை உருவான பின்னர் எத்தனையோ தேசங்களில் ஐநாவின் விதிகளுக்குட்பட்ட சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஈழத்திலும் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம்தான் நடைபெற்றது. பாலஸ்தீனத்திலும் அதுதான் நடைபெற்றது. பல லட்சம் தமிழர்கள் பலியான நிலையிலும் கூட ஐநாவின் அங்கீகாரம் தமிழீழத்துக்கு கிடைக்கவில்லை. ஆனால் போகிற போக்கில் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுப்பது போல இந்திய அரசு மீது அவதூறு பரப்பி ஐநாவிடம் நித்தியானந்தா புகார் கொடுத்து தனிநாடு கேட்டிருக்கிறார். நித்தியானந்தாவின் சேட்டைகள் அனைத்தும் அவர் மீதான தேசதுரோக குற்றங்களில் அடுக்கடுக்காக இணைகின்றன என்பது சட்டவல்லுநர்களின் கருத்து.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications