கர்நாடக மாநில காங். தலைவராகிறார் டிகே சிவகுமார்.. அதிரடி மாற்றங்களை சந்திக்கும் காங்கிரஸ்?
கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக டிகே சிவகுமார் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூர்: கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக டிகே சிவகுமார் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் 104 இடங்களில் பெற்று 7 எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பதவி விலக்கிக் கொண்டது. இதனால் தற்போது மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.

இதனால் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி. அவர் புதன்கிழமை முதல்வராக பதவியேற்க உள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்களை ஒன்றாக இணைத்து கடைசி வரை பாதுகாத்து வைத்து இருந்ததில் டிகே சிவகுமாருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. முன்னாள் அமைச்சரான இவர் எங்கெல்லாம் செல்கிறாராரோ அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இந்த கர்நாடக அரசியல் வெற்றிக்கு பின், சிவகுமார் மிக முக்கியமான நபராக உருவெடுத்துள்ளார். கர்நாடாவில் ஆட்சி அமைப்பதற்காக சிவகுமார் தன்னுடைய பலகால அரசியல் எதிரியான குமாரசாமியுடன் நண்பராக்கும் அளவிற்கு இறங்கி வந்துள்ளார். ஆனால் தற்போது வரை வெளியாகி இருக்கும் கர்நாடக சட்டசபையின் உத்தேச அமைச்சர்கள் பட்டியல் எதிலும் சிவக்குமார் பெயர் இல்லை. குமாரசாமி எந்த பட்டியலிலும் சிவக்குமார் பெயரை குறிப்பிடவில்லை.
அதே சமயம் சிவகுமாரும் அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் அவருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளனர். துணை முதல்வராக குமாரசாமிக்கு அடுத்து வேலை பார்க்க சிவக்குமார் எப்போதும் விரும்ப மாட்டார்.

இதனால் அவருக்கு கண்டிப்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பொறுப்பிற்கு தற்போது மூன்று பேர் இடையில் போட்டியில் நிலவுகிறது. தலித் எம்எல்ஏக்களான கேஜி முனியப்பர், டாக்டர் பரமேஸ்வர் ஆகியோர் இதில் முன்னிலையில் இருக்கிறார்கள். இதில் டாக்டர் பரமேஸ்வர் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. முனியப்பா கட்சி தலைமையின் சொல்படி நடப்பவர் என்பதால், கண்டிப்பாக சிவக்குமார் தலைவராக வாய்ப்புள்ளது.
அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதால், சிவக்குமாரின் தேவை காங்கிரஸ் கட்சிக்கு அதிகமாகி உள்ளது. இதனால் அவருக்கு இன்னும் பெரிய பதவிகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications