பாமகவுடன் சமரசம் கிடையாது.. திமுக கூட்டணியில் இடம் பெற்றால் வெளியேறுவோம்: திருமாவளவன் திட்டவட்டம்
புதுச்சேரி: பாட்டாளி மக்கள் கட்சி (பாமக), பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆகியவை இடம் பெறும் எந்த கூட்டணியிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஒருபோதும் இடம் பெறாது; இதனால் ஏற்படப் போகும் விளைவுகளைப் பற்றியும் எந்த ஒரு கவலையுமே இல்லை என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாமக, பாஜக இடம் பெறும் கூட்டணியில் விசிக இடம் பெறாது என்பது அக்கட்சியின் நிலைப்பாடு. அண்மையில் பாமகவின் மாமல்லபுரம் சித்திரைப் பெருவிழாவுக்கு திருமாவளவனுக்கு நேரில் அழைப்பு வழங்கப்பட்டது. இதனால் விசிகவுடன் பாமக சமரசமாக போவதற்கு முயற்சிப்பதாக கூறப்பட்டது.

மேலும், பாஜகவுடனான கூட்டணியை விரும்பாத டாக்டர் ராமதாஸ், திமுக கூட்டணிப் பக்கம்தான் போக விரும்புகிறார். இதற்கு முன்னோட்டமாகவே திமுக கூட்டணியில் தங்களை கடுமையாக எதிர்க்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோருடன் சமரசமாக போகும் முயற்சிகளை மேற்கொள்கிறது; பாமகவின் இந்த முயற்சிகளைத் தொடர்ந்து பாமகவும் திமுக கூட்டணியில் இடம் பெறலாம் என கூறப்பட்டது.
இது தொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்த திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின், திமுக-பாமக கூட்டணி வதந்திதான் எனவும் கூறியிருந்தார். இருப்பினும் விசிகவைத் தக்க வைக்கவே முதல்வர் ஸ்டாலின் அப்படி கூறியதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் புதுச்சேரியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திருமாவளவன், பாமக மற்றும் பாஜக இடம் பெறும் கூட்டணியில் விசிக ஒரு போதும் இடம் பெறாது; இதனால் ஏற்படப் போகும் விளைவுகளைப் பற்றியும் எந்த ஒரு கவலையுமே இல்லை என கூறியுள்ளார்.
அத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட, திமுகவுடனான கூட்டணி குறித்து அதிருப்தியான கருத்துகளையும் திருமாவளவன் தெரிவித்திருந்தார். தற்போது பாமக இடம் பெறும் அணியில் ஒரு போதும் விசிக இடம் பெறாது என திருமாவளவன் திட்டவட்டமாக கூறியிருப்பதன் மூலம், பாமக உள்ளே வந்தால் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் என்பதுதான் நிலைப்பாடு என தெளிவுபடுத்தி இருக்கிறார் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
-
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
விசிகவில் இருந்து சங்கத்தமிழன் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. திருமாவளவன் அதிரடி ஆக்ஷன்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications