For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உயர்நீதிமன்றங்களில் தலித் நீதிபதிகள் ஒருவர் கூட இல்லை

உயர்நீதிமன்றங்களில் தலித் நீதிபதிகள் ஒருவர் கூட இல்லை.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமை தடுப்பு சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொண்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் உயர்நீதிமன்றங்களில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒரு நீதிபதி கூட இல்லை.

1989-இல் உருவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமை தடுப்பு சட்டம் அமலில் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த சட்டத்தை நீர்த்து போக செய்யும் அளவுக்கு சுப்ரீம் கோர்ட் அதில் திருத்தங்களை கடந்த 20-ஆம் தேதி மேற்கொண்டது.

இதற்கு தலித்துகள் எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

ஒருவர் கூட இல்லை

ஒருவர் கூட இல்லை

இத்தனை போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவின் உயர்நீதிமன்றங்களில் தலித் சமூகத்தைச் சேர்ந்த தலைமை நீதிபதி ஒருவர் கூட இல்லை என்ற தகவல் வேதனை அளிக்கிறது.

தலித் நீதிபதி இல்லை

தலித் நீதிபதி இல்லை

கடந்த 8 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்களில் பணியாற்றும் தலித் சமூகத்து வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகளாக இதுவரை பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. நாட்டில் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் ஒரு தலித் நீதிபதி கூட தலைமை நீதிபதியாக பணியாற்றியது இல்லை.

ஓய்வு பெற்றார்

ஓய்வு பெற்றார்

கடைசியாக 2010-ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த கேஜி பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்றதுடன் சரி. அதன்பிறகு அப்பதவிகளுக்கு வேறு தலித்துகளை இன்னும் நியமனம் செய்யப்படவில்லை.

கைதேர்ந்த வழக்கறிஞர்

கைதேர்ந்த வழக்கறிஞர்

இதுகுறித்து கே ஜி பாலகிருஷ்ணன் கூறுகையில், நீதிமன்றத்தின் உயர்பதவிகளுக்கு இடஒதுக்கீடு முறைக்கான கோரிக்கையை நான் ஆதரிக்கமாட்டேன். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நல்ல கைதேர்ந்த வழக்கறிஞர் என்றால் அவரை நீதிபதியாக நியமனம் செய்ய எந்த வித பாகுபாடும் கிடையாது.

உயர்பதவிகளுக்கு...

உயர்பதவிகளுக்கு...

சட்டத்துறை அமைச்சகமும் சுப்ரீம் கோர்ட்டில் தலித் நீதிபதிகளை பரிந்துரை செய்ய அதன் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது. எனினும் அவ்வாறு எந்த பரிந்துரையும் செய்யப்பட்டதில்லை. இதுவரை நீதிமன்றங்களின் உயர்பதவிகளுக்கு ஜாதி வாரியாக இடஒதுக்கீட்டை கடைப்பிடித்ததில்லை என்றார்.

English summary
In fact, in the past eight years, no judge from SC communities has been elevated to the Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X