சுயசார்பு பாரதம் உருவாவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: பிரதமர் மோடி
கொல்கத்தா: 130 கோடி இந்தியர்கள் இணைந்து உருவாக்கும் சுயசார்பு பாரதத்தை உலகின் எந்த ஒரு சக்தியாலும் தடுத்துவிட முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு நாணயம், அஞ்சல் தலையை வெளியிட்டு பிரதமர் மோடி பேசியதாவது;
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினம் இனி ஆண்டுதோறும் பராக்கிரம தினமாக கொண்டாப்படும். உலகம் பெண்களின் உரிமைகள் குறித்து பேசிக் கொண்டிருந்த காலத்தில் பெண்களைக் கொண்ட ஜான்சி ராணி ரெஜிமென்ட்டையே உருவாக்கியவர் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்.

இந்திய விடுதலைப் போரில் புதிய பார்வையை கொடுத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 2-வது உலக யுத்தத்தின் போது ஒவ்வொரு நாடுகளின் உதவியையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கேட்டது தேசத்தின் விடுதலைக்காக. இன்று ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் விஸ்வரூபத்தை பார்த்து கொண்டிருக்கிறது.
இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படுகிற சவால்களுக்கு நாம் தக்க பதிலடியை கொடுத்து கொண்டிருக்கிறோம். 130 கோடி இந்தியர்கள் இணைந்து உருவாக்கும் சுயசார்பு பாரதத்தை உலகின் எந்த ஒரு சக்தியாலும் தடுத்துவிட முடியாது.
நேதாஜியின் வாழ்க்கை, செயல்பாடுகள், முடிவுகள் அனைத்தும் நமக்கு முன்னுதாரணமானவை. கொரோனா காலத்தில் நாம் பிறநாடுகளுக்கு உதவுவதை பார்த்து நேதாஜி இருந்திருந்தால் பெருமிதம் அடைந்திருப்பார். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications