காதலர் தினத்தை யாராலும் தடுக்கவே முடியாது.. Cow Hug Day கேள்வியால் கொதித்த அமைச்சர் சேகர்பாபு
பிப்ரவரி 14ம் தேதியை Cow Hug Day என கொண்டாட இந்திய விலங்குகள் நலவாரியம் அறிவித்த நிலையில் அது திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
தென்காசி: பிப்வரி 14ம் தேதியில் பசு அரவணைப்பு தினம் கொண்டாட இந்திய விலங்குகள் நலவாரியம் அறிவித்த நிலையில் அதனை இன்று திரும்ப பெற்றுள்ளது. முன்னதாக இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். காதலர் தினம் கொண்டாடுபவர்களை இதுபோன்ற உத்தரவுகளால் தடுக்கவே முடியாது என சேகர்பாபு கூறினார்.
ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கடந்த 2 நாளைக்கு முன்பு
இந்திய விலங்குகள் நலவாரியம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நலவாரியம் மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிலையில் அதன் அறிவிப்பு விவாதத்தை கிளப்பியது.
அதாவது, இந்திய விலங்குகள் நலவாரியம் வெளியிட்ட அறிவிப்பில் பிப்ரவரி 14ம் தேதியை பசு அரவணைப்பு தினம் (Cow Hug Day) என கொண்டாட பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. இந்திய கலாசாரம், கிராமப்புறங்களின் பொருளாதாரம் ஆகியவற்றின் முதுகெலும்பாக பசு உள்ளது. மனிதர்களுக்கு எல்லா செல்வங்களையும் அளிப்பதோடு, தாயை போல் பசு உள்ளது. மேற்கத்திய கலாசார தாக்கத்தால் வேதமரபுகள் அழிவின் விளிம்பில் உள்ளதால் கலாசாரம், பாரம்பரியத்தை காக்க வேண்டும். பசுவை கட்டிப்பிடித்தால் உணர்ச்சி பெருக்கு ஏற்பட்டு மகிழ்ச்சி அதிகரிக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் நேர்மறையான ஆற்றல் பெற பிப்ரவரி 14ம் தேதியை பசு அரவணைப்பு தினமாக (Cow Hug Day) பசுவிரும்பிகள் கொண்டாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சேகர்பாபு எதிர்ப்பு
இந்நிலையில் பசு அணைப்பு தினத்துக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், இன்னொரு தரப்பினரும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இணையதளங்களில் இந்த விவகாரம் விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் தான் பசு அரவணைப்பு தினத்தை அந்த வாரியம் திரும்ப பெற்றது. முன்னதாக, இந்த பசு அரவணைப்பு தினத்துக்கு தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

கும்பாபிஷேக விழா
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டி மேல மரதோணி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சுந்தரராஜ பெருமாள் கோவில் 100 ஆண்டுகளுக்கு பிறகு பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த விழாவுக்கு பிறகு சேகர்பாபு கூறியதாவது:

குடமுழுக்கு விழா
‛‛திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்ட பிறகு 460 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. சுந்தராஜ பெருமாள் கோவில் திருப்பணியை மேற்கொண்ட வைகோ, அவரது குடும்பத்தாருக்கு நன்றி. சங்கரநாராயணர் கோவிலில் ரூ.7.5 கோடி செலவில் திருப்பணிகளை மேற்கொண்டு 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் குடமுழுக்கை நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் அக்கோயிலின் 1000ம் ஆண்டு விழாவை கொண்டாடவும் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

காதலர் தினத்தை தடுக்க முடியாது
இந்த வேளையில் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியை பசுக்களை அரவணைக்கும் தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‛‛காதலர் தினம் கொண்டாடுபவர்களை இதுபோன்ற உத்தரவுகளால் தடுக்க முடியாது. ஆகவே காதலர் தினம் அனைவரையும் நேசிக்கும் வகையில் வரம்பிற்கு உட்பட்டு கொண்டாடப்படும்'' என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications