காங்கிரஸால் தான் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன்: கெஜ்ரிவால் தாக்கு
டெல்லி: முதல்வர் நாற்காலியை விட்டு வந்திருக்கக் கூடாது என்பதை புரிந்து கொண்டதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் 49
நாட்களில் அவரது அரசு போன்று வேறு யாருமே செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றார். ஆனால் மத்திய அரசு ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றவில்லை என்று கூறி கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,

எங்களை போன்று
இந்திய வரலாற்றிலேயே நாங்கள் 49 நாட்களில் செய்த வேலையை யாருமே செய்தது இல்லை. நாங்கள் மின்சாரம், நீரின் விலையை குறைத்தோம். மேலும் ஊழலை கட்டுப்படுத்தினோம்.

மோடி
100 நாட்களில் மோடி என்ன செய்துவிட்டார்?. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பாஜக அரசு தவறிவிட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் ரயில் கட்டணம், பெட்ரோல், சர்க்கரையின் விலையை உயர்த்திவிட்டனர்.

பாடம்
முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கக் கூடாது. அது குறித்து பாடம் கற்றுக் கொண்டேன். நாங்கள் அரசியலுக்கு புதுசு. பதவி நாற்காலியை விட்டு விலகக் கூடாது என்பதை புரிந்து கொண்டோம்.

காங்கிரஸ்
காங்கிரஸ் எங்களை பணியாற்ற விடவில்லை. நான் வெறும் 49 நாட்கள் தான் முதல்வராக இருந்தேன். காங்கிரஸால் தான் நான் விலகினேன்.

மிரட்டல்
மிரட்டல்களை கண்டு பயந்து ஓடுபவர்களில் ஒருவன் அல்ல நான். குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் தனக்காக ஒரு ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார். ஆனால் நான் பழைய வேகன் ஆர் காரில் தான் பயணம் செய்கிறேன்.

மானியம்
மின்சாரத்திற்கு ரூ.200 கோடி மானியம் அளித்ததற்காக என்னை குறை கூறினார்கள். நான் என்ன எனக்காகவா செய்தேன், மக்களுக்காக செய்தேன் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications