For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சல்மானின் சில வழக்குகளுக்கு அவரது ஹீரோயின்களை விட வயசு ஜாஸ்தி.. இது கப்பார் நக்கல்!

Google Oneindia Tamil News

மும்பை: சல்மான் கான் மான் வேட்டை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதை டிவிட்டரில் பலரும் ஓட்டி வருகின்றனர். அந்த மானை யாரும் கொல்லவில்லை. அதுவாகவே செத்துப் போய் விட்டதாக பலரும் கிண்டலடித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1998ம் ஆண்டு இந்திப் படத்தின் ஷூட்டிங்குக்காக சென்றிருந்தார் சல்மான் கான். அப்போது அவரும், சயீப் அலிகான், தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோர் அரிய வகை மானை (சிங்காரா) வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. 3 மான்களை சல்மான் கான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக பரபரப்பு கிளம்பியது.

இதையடுத்து அவர் மீது ஜோத்பூர் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2006ம் ஆண்டு சல்மானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் விடுதலை

சுப்ரீம் கோர்ட்டில் விடுதலை

அதை விசாரித்த ஹைகோர்ட் தண்டனையை நிறுத்தி வைத்தது. இதை எதிர்த்து ராஜஸ்தான் அரசு சுப்ரீம் கோர்ட் போனது. அங்கு இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று சல்மான் கானை விடுதலை செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து சல்மான் கானையும், தீர்ப்பையும் பலரும் டிவிட்டரில் விமர்சித்து வருகின்றனர்.

சுவிஸ் பாங்க்ல இருக்கு

அனுராதா என்பவர் போட்டுள்ள டிவிட்டில் சல்மான் கான் எந்த மானையும் கொல்லவில்லை. அவர் மட்டுமல்ல யாருமே கொல்லவில்லை. எல்லாமே சுவிஸ் வங்கியில் பத்திரமா இருக்கு என்று கிண்டலடித்துள்ளார்.

படமே ஓடாத இடத்துக்கு அனுப்பிட்டாரு

இவர் போட்டுள்ள டிவிட்டில் சல்மான் மானைக் கொல்லவில்லை. மாறாக தனது படமே ஓடாத இடத்திற்கு அவற்றை அவர் பத்திரமாக அனுப்பி வைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

இது கப்பார் ஸ்டைல்!

வழக்கம் போல கப்பார் கலக்கியுள்ளார். அவர் கூறியிருப்பது.. சல்மான் கானின் சில வழக்குகள், அவரது ஹீரோயின்களை விட வயதானைவை என்று நக்கலடித்துள்ளார்.

English summary
Twitterattis are trolling actor Salman Khan for his release in Black Buck case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X