விமான நிலையங்களில் பார்க்கிங் கட்டண ரத்து நீட்டிப்பு!
டெல்லி: பணத் தட்டுப்பாடு காரணமாக விமான நிலையங்களில் வாகன நிறுத்தக் கட்டண ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமரின் ரூ.1000, 500 நோட்டுகள் ஒழிப்பு அறிவிப்புக்குப் பிறகு நாட்டில் மிகவும் அசாதாரண நிலை நிலவுகிறது. ரூ.100, ரூ.50 என குறைந்த மதிப்பிலான நோட்டுகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.

வங்கிகளில் போதிய பணமில்லை. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பொதுமக்கள் அவதியுற்று வருவதால், விமான நிலையங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒரு வார காலம் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. இந்த ரத்து காலம் நேற்று முன்தினத்துடன் முடிந்து விட்டது.
இந்த நிலையில் ரத்து காலத்தை 28-ந் தேதி நள்ளிரவு வரை மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இது இந்திய விமான நிலையங்களின் ஆணையம் மற்றும் தனியார் நிர்வகிக்கும் அனைத்து விமான நிலையங்களுக்கும் பொருந்தும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மால்களில்..
இதற்கிடையே, பணத்தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல வணிக வளாகங்களிலும் பார்க்கிங் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் நாளை வரை நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த சலுகை மேலும் நீட்டிக்கப்படுமா என்பது தெரியவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications