ரயில்வே இ-டிக்கெட்டுகளுக்கான சேவை கட்டணம் ரத்து.. மத்திய பட்ஜெட்டில் அருண் ஜேட்லி அறிவிப்பு
ரயில்வே இ-டிக்கெட்டுகளுக்கான சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
டெல்லி: 2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். அதில் ரயில்வே இ-டிக்கெட்டுகளுக்கான சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் 2017-18ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டும் ரயில்வே பட்ஜெட்டும் ஒருங்கிணைந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார். அதில் ரயில்வே துறைக்கான பாதுகாப்பு, புதிய ரயில்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது, ரயில்வே இ-டிக்கெட்டுக்களுக்கான சேவை கட்டணம் ரத்து செய்யப்படும் என்றும் பணமற்ற பரிவர்த்தனைக்கு ஊக்கம் தரும் வகையில் இது அமையும் என்றும் அருண் ஜேட்லி குறிப்பிட்டார். பணமற்ற டிக்கெட் பரிவர்த்தனை 58 சதவீதத்திலிருந்து 68 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும், 2020ம் ஆண்டுக்குள் ஆளில்லா ரயில்வே கேட் இல்லாத நிலை நாடு முழுவதும் ஏற்படுத்தப்படும் என்றும், மெட்ரோ ரயில் போக்குவரத்து நகர்ப்புறங்களுக்கு முக்கியம் என்பதால், புதிய மெட்ரோ ரயில் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மெட்ரோ ரயிலுக்காக தனி சட்டம் விரைவில் இயற்றப்படுகிறது என்பதையும் நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications