"தடுப்பூசி போடுங்க.. இல்லாட்டி ஒரு மாச சம்பளம் கட்".. அதிகாரி போட்ட போடு.. பரபரப்பில் "இணையம்"
ராய்ப்பூர்: தடுப்பூசியை போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளமே இல்லை என்று அதிகாரி சொல்லிவிட்டார்.. இதனால், அரசு ஊழியர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்..!
தற்போது கொரோனா தீவிரமெடுத்து வருகிறது.. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.. மேலும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால், தடுப்பூசியை கண்டு பலரும் அச்ச உணர்விலேயே உள்ளனர்.. எனவே, தடுப்பூசியினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று டாக்டர்கள் விளக்கம் தந்து வருகின்றனர்.. அந்தந்த மாநில அரசும் இதுகுறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

விழிப்புணர்வு
அப்படி இருந்தும் பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவே பயப்படுகிறார்கள்.. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்திலும் பொதுமக்கள் ஊசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வருகிறார்கள்.. இதனால், அங்குள்ள ஒரு மாவட்ட அதிகாரி தடாலடியாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதிகாரி
சத்தீஸ்கர் மாவட்டத்தின் கவுரெலா - பெந்திரா - மார்வாஹியில் உள்ள பழங்குடியினர் நலத்துறை அலுவலகங்கள், ஆசிரமங்கள், விடுதிகளில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அம்மாவட்ட பழங்குடி நலத்துறை அதிகாரி கே.எஸ் மஸ்ராம் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவு
தடுப்பூசி போட்டுக் கொண்ட ஊழியர்கள் அதற்கான சான்றிதழை காட்ட வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களுக்கு அடுத்த மாத சம்பளம் ரத்து செய்யப்படும் என்றும் இந்த உத்தரவானது கடந்த மே 21 அன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதிகாரியின் இந்த உத்தரவை கேட்ட ஊழியர்கள் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்..

நிதி நெருக்கடி
அத்துடன் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சோஷியல் மீடியாவிலும் அதிகாரியின் இந்த உத்தரவு வைரலானது.. இதனால் பொதுமக்கள் பலரும் அதிகாரியின் இந்த உத்தரவுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.. இப்படிப்பட்ட கொரோனா காலத்தில், நிதி நெருக்கடியில் உள்ள ஊழியர்களை தடுப்பூசியை காரணம் காட்டி மிரப்படப்படுவதாகவும், சரியான ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக இந்த முடிவை அதிகாரி எடுத்துள்ளதாகவும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

சம்பளம்
இதனிடையே, இந்த உத்தரவை பிறப்பித்த அம்மாவட்ட துணை கமிஷனர் ஆணையர் மாஸ்ராம் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "அனைத்து ஊழியர்களும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தேன்.. கொரோனாவுக்கு எதிரானப் போரை தீவிரப்படுத்த வேண்டும் என்பது தான்.. என்னுடைய உத்தரவுக்குப்பின் 95 சதவீத ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திவிட்டனர். யாருடைய ஊதியத்தையும் அடுத்த மாதம் நிறுத்தி வைக்கமாட்டோம்" என்று விளக்கம் தந்துள்ளார்.












Click it and Unblock the Notifications