பண நெருக்கடியால் விபச்சாரத்தில் தள்ளப்பட்டேன்- நடிகை ஸ்வேதாபாசு கண்ணீர்
ஹைதராபாத்: எனக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. சில நல்ல விஷயங்களுக்காக பணம் தேவைபட்டது. என்னிடம் இல்லை. எல்லா கதவுகளும் மூடப்பட்டு விட்டன. அப்போது விபசாரத்தில் ஈடுபட்டால் நிறைய சம்பாதிக்கலாம் என்று சொல்லி என்னை அதில் தள்ளிவிட்டனர் என்று விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட சுவேதா பாசு கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடத்திய விபசார வேட்டையில் முன்னணி நடிகை கைது செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்தனர். ஓட்டலில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் வந்ததாகவும், அதன் பேரில் அங்கு சோதனை நடத்தியபோது தொழில் அதிபருடன் விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நடிகையை கையும் களவுமாக பிடித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். நடிகை யார் என்பதை வெளியிடாமல் இருந்தனர்.

தற்போது விபசாரத்தில் கைதான நடிகை ஸ்வேதா பாசு என தெலுங்கு இணையதளங்கள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.
குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் பட உலகில் அறிமுகமான ஸ்வேதாபாசு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளார்.
தெலுங்கு படங்களில் அதிக அளவில் நடித்துள்ள சுவேதா,தமிழில் ராரா, ரகளை, சந்தமாமா படங்களில் நடித்துள்ளார். பல டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் விபாசர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்வேதா பாசுவுடன் விபசார புரோக்கர் பாலுவும் கைதானார்.
கைதான ஸ்வேதா பாசு, பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபசாரத்தில் ஈடுபட்டது ஏன் என்பது பற்றி ஸ்வேதா பாசு விளக்கம் அளித்துள்ளதாக தெலுங்கு இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வேதா, சினிமா வாழ்க்கை எனக்கு சரியாக அமையவில்லை. தவறான படங்களை தேர்வு செய்து நடித்தேன். எனக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. சில நல்ல விஷயங்களுக்காக பணம் தேவைபட்டது. என்னிடம் இல்லை. எல்லா கதவுகளும் மூடப்பட்டு விட்டன.
அப்போது விபசாரத்தில் ஈடுபட்டால் நிறைய சம்பாதிக்கலாம் என்று சொல்லி என்னை அதில் தள்ளிவிட்டனர். எனக்கு வேறு வழி தெரியவில்லை. விடுபடவும் முடியவில்லை. என் பிரச்சினை யாருக்கும் புரியவில்லை. என்னைபோல் பல பெண்கள் இந்த பிரச்சினையில் சிக்கி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
ஸ்வேதாவைப் போல பல நடிகைகள் பணத்திற்காக விபசார படுகுழியில் தள்ளப்படுவது வாடிக்கையாகவே உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications