For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொண்டை தண்ணி வற்ற ஆ, ராசா- கனிமொழி குற்றவாளி என கூப்பாடு போட்ட வட இந்திய ஊடகங்களுக்கு நோஸ் கட்!!

ஆ, ராசா- கனிமொழி குற்றவாளி என கூப்பாடு போட்ட வட இந்திய ஊடகங்களுக்கு நோஸ் கட் கொடுத்தது சிபிஐ கோர்ட் தீர்ப்பு.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    2 ஜி வழக்கு- ஆ ராசா, கனிமொழி விடுவிப்பு- வீடியோ

    டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆதாரங்களே இல்லாத யூகத்தால் இவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற ஒரு தோராய அறிக்கையை வைத்துக் கொண்டு திமுகவை ஒரு ஊழல் கட்சி; ஆ. ராசாவும் கனிமொழியும் குற்றவாளிகள் என வட இந்திய ஊடகங்கள் நெஞ்சில் அடித்துக் கொண்டு வைத்த ஒப்பாரிகளுக்கெல்லாம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி இன்று நெத்தியடி தீர்ப்பு கொடுத்திருக்கிறார்.

    இந்திய அரசியல் வரலாற்றில் ஊடகங்களே தீர்ப்பு எழுதியது ஸ்பெக்ட்ரம் வழக்கில்தான்.. ஒரு தோராய அறிக்கை வெளியானதுதான் தாமதம்.

    துள்ளி குதித்தனவே

    துள்ளி குதித்தனவே


    அது குறித்து எந்த ஒரு விசாரணையுமே கிடையாது.,. நீதி பரிபாலனத்தை செய்ய வேண்டிய நீதிமன்றங்களைப் பற்றி கவலை கிடையாது... அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த அதுவும் டெல்லியின் கண்களுக்கு உறுத்தலாக இருக்க கூடிய திராவிட சித்தாந்த கட்சியின் இருவர் மீதான அவதூறு என்றவுடன் துள்ளி குதித்தன வட இந்திய ஊடகங்கள்.

    ஜெயிலுக்கு அனுப்பி நிம்மதி

    ஜெயிலுக்கு அனுப்பி நிம்மதி

    கச்சைகட்டிக் கொண்டு நீதிமன்ற விசாரணைகளைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. ஆ. ராசாவும் கனிமொழியும் குற்றவாளிகளே என பொய் பிரசாரத்தை ஊடக அறநெறிகளை தூர எறிந்துவிட்டு ஒப்பாரி வைத்து திஹார் சிறைக்கு இருவரையும் அனுப்பி நிம்மதி பெருமூச்சுவிட்டன.

    திராவிட வெறுப்பின் உச்சம்

    திராவிட வெறுப்பின் உச்சம்

    எத்தனை எத்தனை சித்தரிப்புகள்? எப்படியான காட்சிகள் விவரிப்புகள்? தமிழகத்தின் மீதான வெறுப்பை, திராவிட கட்சிகள் மீதான காழ்ப்புணர்ச்சி அரிப்புகளை ஆ.ராசா, கனிமொழி மீது கொட்டி தங்களுக்கு தாங்களே சொரிந்து கொண்டிருந்தன இந்த வட இந்திய ஊடகங்கள்.

    மன்னிப்பு கேட்க தயாரா?

    மன்னிப்பு கேட்க தயாரா?

    இதோ ஒற்றை வரியில் வட இந்திய நீதிபதி ஓபி ஷைனிதானே அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துவிட்டார். அன்று கும்மாளம்போட்டு கெக்களிப்பு காட்டிய வட இந்திய ஊடக ஜாம்பவான்களே! அன்றைய சிஏஜி வினோத்ராயின் கைக்கூலிகளாக ஆட்டம் போட்ட ஊடகங்களே! இன்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு ஊடக தர்மத்தை நிலைநாட்ட தயாரா?

    English summary
    All North Indian Medias taken the 2g issue with their biased attitude against DMK seniro leader A Raja and Kanimozhi. Now North Indian Media's trial on 2G issue was blasted by Delhi CBI Special Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X